தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு
9 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளுக்கு தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான ஜிம்பாப்வேயின் முதல் டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகள் இழந்துள்ளது.
ஜிம்பாப்வே-க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி, புலவாயோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த அணியில், சாம் கர்ரண் சகோதரர் பென் கர்ரண் விளையாடுகிறார். அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக நிக் வெல்ச் 68 பந்துகள் விளையாடி 27 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் நாதன் ஸ்மித் 1 விக்கெட்டும், மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
26.2 ஓவர்களில் 4-ஆவது விக்கெட் விழுந்தபோது மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடக்கமே முதல்முறையாக (2021) நியூசிலாந்து கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
Zimbabwe captain Craig Ervine won the toss and elected to bat against New Zealand on Wednesday in the first cricket test between the two nations in almost nine years.