செய்திகள் :

Alert: 'உஷார்' - `டயர் பஞ்சர் பார்க்கும்போது இப்படியும் ஏமாத்துவாங்களா?' - எச்சரித்த அனுபவசாலி!

post image

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரனய் கபூர். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. சாதாரண ஒரு பஞ்சர் மூலம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பான எச்சரிக்கு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அவர் அந்த வீடியோவில், ``நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது என் காரின் டயரில் ஒன்று பஞ்சராகியிருக்கிறது என உணர்ந்தேன். உடனே பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் ஒரு பஞ்சர் கடையில் காரை நிறுத்தி பஞ்சர் பார்க்கப்படுமா எனப் பார்க்கச் சொன்னேன்.

டயர் பஞ்சர்
டயர் பஞ்சர்

அவரும் வழமைபோல காரின் டயரைக் கழற்றி, டியூபில் காற்றை நிரப்பி, சோப்பு தண்ணீரை வைத்து பஞ்சர் பார்த்தார். ஸ்குரூ ஒன்று ஏறியிருப்பதாகத் தெரிவித்து அந்தப் பஞ்சரை காண்பித்தார். தொடர்ந்து டியூப் முழுவதும் பரிசோதித்துவிட்டு மொத்தம் 4 பஞ்சர் இருப்பதாகக் கூறினார். ஒரு பஞ்சர் பெரியது மற்றவை சிறியது. நம் சாலை, நாம் பயணிக்கும் பகுதி அதனால் பஞ்சர் ஆகியிருக்கலாம் எனக் கருதி 'ஒரு பஞ்சருக்கு எவ்வளவு?' எனக் கேட்டேன். 'ஒரு பஞ்சருக்கு ரூ.300 என 4 பஞ்சருக்கு ரூ.1200' எனத் தெரிவித்தார். சரி என நான் பஞ்சர் ஒட்டி முடித்தேன்.

ஆனாலும் மனதில் ஒரு நெருடல் இருந்தது. அதனால், ஒரு டயர் கடையில் காரை நிறுத்தி பஞ்சர் குறித்து தெரிவித்தேன். அந்தக் கடைக்காரர் டயரைக் கழற்றி சோதித்துவிட்டு, 'உண்மையில் உங்கள் டயரில் இருந்தது ஒரு பஞ்சர் தான். மற்ற மூன்றும் பஞ்சர் ஒட்டியவர் ஏற்படுத்தியது' என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. 'பஞ்சர் ஒட்டும்போது நான் அருகில்தானே இருந்தேன். அவர் பஞ்சர் செய்யவே இல்லையே' என்றேன். அப்போதுதான் அந்தக் கடைக்காரர், மோதிரம் ஒன்றை காண்பித்தார்.

டயர் கடை
டயர் கடை

அந்த மோதிரத்தின் உள்கைப் பக்கம் சிறு கம்பி போன்று ஒன்று இருக்கிறது. 'பஞ்சர் ஒட்டும்போது சிலர் இதை அணிந்துகொள்வார்கள். இதை டியூபின் மீது வைத்தாலே போதும். பஞ்சராகிவிடும். ஒவ்வொரு கடைக்காரரும் மோதிரம், காப்பு என அவர்களுக்கேற்றதுபோல ஒன்றை வைத்து இப்படி செய்து சம்பாதித்துக்கொள்கிறார்கள்' என்றார். எனக்கு என்ன நடந்தது எனப் புரிந்தது. வேறு வழியே இல்லாமல் ரூ.8000 கொடுத்து வேறு டயர் மாற்றினேன். எனவே நீங்களும் கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

’பிரான்ஸை விட இந்தியாவில் தான் பாதுகாப்பாக...’ கவனம் பெற்ற பிரெஞ்சு பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆசிரியையாக பணிபுரியும் பிரெஞ்சு பெண் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நைஜீரிய யூடியூபரான பாஸ்கல் ஒலால... மேலும் பார்க்க

Instagram: இன்ஸ்டகிராம் அறிமுகப்படுத்திய 3 புதிய அம்சங்கள்; என்னென்ன தெரியுமா?

பிரபல சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை கோடிக்கணக்கானப் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற சமூக வலைதளங்களைவிட இன்ஸ்டகிராமிற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் புது பு... மேலும் பார்க்க

பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆசாமி

பீகார் மாநிலத்தில் போலி குடியிருப்பு சான்றிதழ் வழக்கு அதிகரித்து வரும் நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருமணத்தில் மணமகள் மது அருந்துவது ஒரு சடங்கு! சுவாரஸ்ய பின்னணி என்ன?

ராஜஸ்தானில் பண்டைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மணமக்கள் வீட்டார் மது அருந்துவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். படிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது அல்லவா? திருமண விழாக்கள்... மேலும் பார்க்க

Elon Musk: தனது 3 வயது மகனின் ஓவியத்தை அனிமேஷனாக பகிர்ந்த எலான் மஸ்க் - எப்படித் தெரியுமா?

எலான் மஸ்க்கின் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஷிவோன் ஜிலிஸ், தனது மூன்று வயது மகன் வரைந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் (Grok Imagine) கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளார். ஸ்ட்ரை... மேலும் பார்க்க

Health: மெக்னீசியம் கிரீம் தடவினால் தூக்கம் நன்றாக வருமா?!

செல்போனை ஓப்பன் செய்தாலே, 'நைட்ல மெக்னீசியம் கிரீமை உடம்புல தடவிக்கிட்டுப் படுத்தா நல்லா தூக்கம் வரும்' என்கிற ரீல்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. மெக்னீசியம் கிரீம் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம்; நன்ம... மேலும் பார்க்க