ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்
Army: ``அதிவிரைவு தொழில்நுட்பத்திற்கு அக்னி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்'' - தலைமை தளபதி அறிவுரை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்ட்டர் எனப்படும் இந்த ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியும் இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முப்படை அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இரண்டு நாள் பயணமாக வெலிங்டன் ராணுவ மையத்திற்கு வருகை தந்திருந்த இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி, முப்படை பயிற்சி அதிகாரிகளுடன் அதிநவீன ராணுவ செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருக்கிறார். மேலும், ராணுவ பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமை தளபதி, அவர்களிடம் உரை நிகழ்த்தியிருக்கிறார்.
ராணுவ பயிற்சி மையத்தில் பேசிய தலைமை தளபதி உபேந்திரா திவேதி, "உலகில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராணுவத்திலும் அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

அதிநவீன தொழில்நுட்பங்களை கையாள இந்த தலைமுறை ராணுவத்தினர் தயாராக இருக்க வேண்டும். இந்த அதிவிரைவு ராணுவ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தி அக்னி வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் " என அறிவுரை வழங்கியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
