செய்திகள் :

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

post image

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர்.

ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார்.

அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனும் தனது தந்தையுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். இது தவிர அமிதாப் பச்சன் தனது நண்பனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஆனந்த் பண்டிட் என்பவர் லோடஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது கட்டுமான நிறுவனத்திற்குப் பங்குச்சந்தை மூலம் ரூ.400 கோடி திரட்டினார். இதில் அமிதாப் பச்சன் ரூ.10 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார்.

இது தவிர நடிகர் ஷாருக்கானும் தனது குடும்ப டிரஸ்ட் மூலம் இதே நிறுவனத்தில் ரூ.10.1 கோடிக்கு 6.75 லட்சம் பங்குகளை வாங்கி இருக்கிறார்.

அதோடு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தயாரிப்பாளர் ஏக்தா கபூர், சாரா அலி கான், டைகர் ஷெராப், ராஜ்குமார் ராவ் ஆகியோரும் இந்த கம்பெனியில் முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து ஆனந்த் பண்டிட் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பேட்டியில், "அமிதாப்பச்சன் படங்களைப் பார்த்து வளர்ந்தேன். அவரது திரிசூல் படம்தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தது. அந்த படம்தான் என்னை அகமதாபாத்தில் இருந்து மும்பை வரும்படி தூண்டியது.

திரிசூல் படத்தில் வரும் அமிதாப்பச்சனின் விஜய் கதாபாத்திரத்தால்தான் நான் இன்றைக்கு இங்கு இருக்கிறேன். அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகில் ரூ.50 கோடிக்கு வீடு வாங்கினேன்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

அமிதாப்பச்சன் தனது வீட்டை விரிவுபடுத்த நினைத்தபோது எனது வீட்டை அவருக்கு விற்பனை செய்துவிட்டேன்'' என்றார்.

ஆனந்த் பண்டிட் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான், "நான் ஆனந்துடன் இரவு 12 மணிக்கு காரில் ஜுகுவைச் சுற்றி வருவேன். எந்தக் கட்டிடத்தையும் இது தனக்குறியது என்று சொல்லமாட்டார்.

ஆனால் இறுதியில் ஒரு சில கட்டிடங்களைத் தவிர மற்ற அனைத்து கட்டிடங்களும் தனக்குறியது என்று சொல்வார்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

மும்பை: நடிகர் சல்மான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது.. மடக்கி பிடித்த போலீஸார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது. சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் ச... மேலும் பார்க்க

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலா... மேலும் பார்க்க

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்த... மேலும் பார்க்க

Marriage Dance: கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் சேர்ந்து வைரல் நடனமாடிய ஐஸ்வர்யா ராய்

மும்பையில் நடந்த திருமணம் ஒன்றில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டனர். திருமணத்தில் பாடகர் ராகுல் வைத்யா இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்பாடல்களை விரும்பிக்... மேலும் பார்க்க

சிதாரே ஜமீன் பர் படப் புறக்கணிப்பு விவகாரம்; தயாரிப்பு நிறுவன ப்ரொபைல் படத்தை மாற்றிய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தி... மேலும் பார்க்க