செய்திகள் :

Brad Pitt: 'F1' வெற்றிக்குப் பிறகு பிராட் பிட் படம் - ஒன்றிணையும் ஹாலிவுட்டின் டாப் இயக்குநர்கள்!

post image

'F1' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தத் திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார் பிராட் பிட்.

Cliff Booth - Once Upon a time in Hollywood
Cliff Booth - Once Upon a time in Hollywood

குவென்டின் டாரன்டினோவின் (Quentin Tarantino) 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood)' திரைப்படத்தின் கிளிஃப் பூத் (Cliff Booth) கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படமான 'தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்' படத்தில்தான் பிராட் பிட் நடிக்கவிருக்கிறார்.

2019-ம் ஆண்டு குவென்டின் டாரன்டினோவின் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படம் வெளிவந்திருந்தது.

டாரன்டினோ அதன் பிறகு 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் கதையை விரிவுபடுத்தி நாவலாக 2021-ம் ஆண்டு எழுதத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 'தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத்' திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதினார்.

இப்படத்தை 'ஃபைட் கிளப்', 'செவன்' போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்கவுள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

Brad Pitt - F1 Movie
Brad Pitt - F1 Movie

ஹாலிவுட்டின் இரண்டு முக்கியமானவர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைவது உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

இத்திரைப்படம் நடிகர் பிராட் பிட், இயக்குநர் டேவிட் ஃபின்சர் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படம்.

1970-களில் நடக்கும் கதைக்களம் என்பதால் படத்திற்காக பிரத்தியேகமாக கலிஃபோர்னியாவில் செட்டும் அமைத்திருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Ed Sheeran: "என் குழந்தைகளுடன் சாதாரண மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்" - பாடகர் எட் ஷீரன்

இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான எட்வர்ட் கிறிஸ்டோபர் ஷீரன், உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர். உலகின் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ‘+–=÷× M... மேலும் பார்க்க

Monica Belluci : 'தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!' - யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெள... மேலும் பார்க்க

The Odyssey: ரிலீஸுக்கு ஒரு வருஷம் இருக்கும்போதே Ticket Sold Out! - முன்பதிவில் அசத்தும் நோலன் படம்

`இன்டர்ஸ்டெல்லர்', `இன்செப்ஷன்', `டெனட்' போன்ற திரைப்படங்கள் எடுத்துப் பிரபலமானவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். `தி டார்க் நைட் டிரைலாஜி', `தி பிரஸ்டீஜ்' போன்ற படங்களையும் இயக்கி பெயர் பெற்றவ... மேலும் பார்க்க

Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தலான புதிய ஆரம்பம்!

ஜேம்ஸ் கன் இயக்கத்தில் டிசி யூனிவர்ஸின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த சூப்பர்மேன். சூப்பர்மேனின் தோற்றக் கதையை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, கிளார்க் கென்ட் (டேவிட் கோரன்ஸ்வெட்) ஏற்கெனவ... மேலும் பார்க்க

Jurassic World Rebirth Review: அதே கதை, அதே டெம்ப்ளேட், அதே சாகசம் - இதுல டைனோசரே டயர்டாகிடும் பாஸ்!

பச்சை பசேலென உயர்ந்து நிற்கும் மரங்கள், அந்த உயரத்தைத் தாண்டி நிற்கும் ஓர் அழிந்து போன உருவம். மெதுவாக இலைகளைத் தின்று பூமி அதிர தன் இரு கால்களையும் தூக்கி நிற்க... "இது... இது ஒரு டைனோசர்!" என்று நாய... மேலும் பார்க்க