கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
Bumrah: `திடீர் காயம்; மைதானத்திலிருந்து வெளியேறிய பும்ரா; கேப்டனாக கோலி'-சிட்னியில் என்ன நடக்கிறது?
பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தங்களின் முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் சுருட்டியிருக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் கேப்டனும் முக்கிய பௌலருமான பும்ரா காயம் காரணமாக திடீரென மைதானத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்.
நடப்புத் தொடரில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக ஜொலித்து வருகிறார் பும்ரா. இந்தத் தொடரில் இதுவரைக்கும் மட்டும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த சிட்னி போட்டியிலுமே இதுவரைக்கும் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை பும்ராதான் எடுத்துக் கொடுத்தார். நேற்றே கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியவர், இன்று லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு மெய்டனோடு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நன்றாக வீசிக்கொண்டிருந்த பும்ரா திடீரென அசௌகரியமாக உணர்ந்ததால் உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மைதானத்திலிருந்து வெளியேறினார். உணவு இடைவேளை முடிந்தவுடன் மீண்டும் களத்துக்கு வந்த பும்ரா ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசியிருந்தார்.
மீண்டும் அசௌகரியமாக உணர்ந்ததால் பெவிலியனுக்குத் திரும்பினார். ஆனால், இந்த முறை மீண்டும் களத்துக்குத் திரும்பவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து பும்ரா மைதானத்திலிருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார். அவர் ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பும்ரா காயம் காரணமாக வெளியேறியிருக்கும் நிலையில் கோலி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். பும்ரா இல்லாத நிலையில் மற்ற பௌலர்கள் திறம்படச் செயல்பட்டு இந்திய அணியை முன்னணிக்குக் கொண்டு சென்றுள்ளனர். பும்ராவின் காயம் பற்றி இன்னும் சில நிமிடங்களில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.