Career: டேராடூன் மிலிட்டரி பள்ளியில் மாணவர் சேர்க்கை; யார், யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
டேராடூனிலுள்ள இராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ்-ல் மாணவ - மாணவிகளுக்குக் கல்வி வாய்ப்பு.
ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ் என்பது பள்ளிக்கூடம் ஆகும். இங்கே 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இந்தப் பள்ளியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் மாணவர்கள் பலர் இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். ஆக, உங்கள் பிள்ளைகளுக்குக்கூட இந்த சூப்பரான வாய்ப்பு கிடைக்கலாம்.
என்ன வாய்ப்பு?
இந்தப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
வயது வரம்பு: 11 1/2 - 13.
தகுதி: ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
எங்கே தேர்வு?
தமிழ்நாட்டில் சென்னை.
எப்போது தேர்வு?
ஜூன் 1, 2025.
என்னென்ன தேர்வுகள் நடைபெறும்?
எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
எழுத்துத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, நேர்காணல் தேதி அறிவிக்கப்படும்.
தேர்வில் ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றிருக்கும்.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
www.rimc.gov.in என்கிற இணையதளத்தில் கட்டணம் செலுத்தினால், விண்ணப்பம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.