உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக்...
Coolie: "தனக்கே உரிய ஸ்டைலால்..." - சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்; இபிஎஸ் வாழ்த்து
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதேசமயம் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்தின் 50 ஆண்டுக்கால சினிமா பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள 'கூலி' திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்" என்று ரஜினிகாந்தை வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 13, 2025
தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள… pic.twitter.com/6DXVh2xakm