செய்திகள் :

CSK vs MI : `பொடுசுங்கலாம் கதறட்டும்; விசில் பறக்கட்டும்...' - ப்ரஷர் ஏற்றி வென்ற சிஎஸ்கே

post image

சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது சென்னை. அதுவும். சேப்பாக்கத்தில் வைத்து தங்களின் வலுவான எதிரியான மும்பையை வீழ்த்தி சென்னை அணி இந்தப் போட்டியை வென்றிருக்கிறது. ஆனால், இது எளிதில் வென்றிருக்க வேண்டிய போட்டி. அதை கடைசி வரை இழுத்து ப்ரஷர் ஏற்றி சென்னை அணி வென்றிருக்கிறது.

CSK

சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். சென்னை அணியின் லெவனிலேயே சர்ப்ரைஸ் இருந்தது. கான்வேயையும் பதிரனாவையும் பென்ச்சில் வைத்திருந்தார்கள். ரச்சின், நூர், சாம் கரண், நேதன் எல்லீஸ் என நான்கு வெளிநாட்டு வீரர்களை ருத்துராஜ் லெவனில் எடுத்திருந்தார்.

பவர்ப்ளேயிலேயே சென்னை அணி ஆட்டத்துக்குள் வந்துவிட்டது. கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே லெக் சைடில் வட்டத்துக்குள்ளேயே அடித்து ரோஹித் டக் அவுட் ஆகினார். கலீல் வீசிய அடுத்த ஓவரில் ரிக்கல்டன் இன்சைட் எட்ஜ் ஆகி போல்ட் ஆகியிருந்தார். ஓப்பனர்கள் இருவரும் தாக்கமே ஏற்படுத்தவில்லை. அஷ்வினை பவர்ப்ளேக்குள்ளாகவே அழைத்து வந்திருந்தனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணிக்கு திரும்பியிருக்கும் அஷ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜாக்ஸின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

மும்பை அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த இடத்திலிருந்து சூர்யாவும் திலக் வர்மாவும் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், இங்கே நூர் அஹமது சர்ப்ரைஸ் கொடுத்தார். மிடில் ஓவர்களில் மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகளையெல்லாம் வீழ்த்திக் கொடுத்தார்.

நூர் அஹமது வீழ்த்திய 4 விக்கெட்டுகளுமே ரொம்பவே முக்கியமானவை. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். முதலில் சில விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் திலக் வர்மாவும் சூர்யாவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 36-3 என்ற நிலையிலிருந்து 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் வைத்திருந்தனர். இந்த கூட்டணி கியரை மாற்றி அட்டாக்கிங்காக செல்ல இருந்த சமயத்தில் சரியாக இந்த கூட்டணியை நூர் அஹமது உடைத்தார்.

Noor Ahmed
Noor Ahmed

சூர்யாவை ஸ்டம்பிங் ஆக்கினார். அதேமாதிரி, திலக் வர்மா, ராபின் மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். திலக் வர்மா நின்று கடைசி வர ஆடும் மனநிலையில் இருந்தார். அவரை lbw ஆக்கி வெளியேற்றினார். ராபின் மின்ஸ் துடிப்பான இளம் வீரர். அதிரடியாக ஆடக்கூடியவர். அவரும் அட்டாக்கில் இறங்குவதற்குள் வீழ்த்தினார். அதேமாதிரி, கீழ்வரிசையில் நமன் தீரின் விக்கெட்டையும் காலி செய்தார். இப்படியாக மொத்தம் 4 விக்கெட்டுகள். அத்தனை விக்கெட்டுகளுமே சென்னை அணி பக்கமாக போட்டியை நகர்த்திக் கொண்டே வந்தன.

கடைசியில் தீபக் சஹார் ஒரு நல்ல கேமியோவை ஆடியதால் மும்பை அணி 150 ரன்களை கடந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்திருந்தனர்.

Ruturaj
Ruturaj

சென்னை அணியின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்பட்டது. இங்கேயும் ருத்துராஜ் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். கலீலுக்கு பதில் ராகுல் திரிபாதியை இம்பாக்ட் ப்ளேயராக கொண்டு வந்து ரச்சினையும் ராகுலையும் ஓப்பனிங் இறக்கினார். ருத்துராஜ் நம்பர் 3 இல் வந்தார். ட்ரெண்ட் போல்டை சமாளிக்க இப்படியொரு மாற்றத்தை செய்திருக்கலாம். ஆனால், இது பெரிதாக கைகொடுக்கவில்லை. திரிபாதி 2 ரன்களில் தீபக் சஹார் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் அவுட் ஆனார். நம்பர் 3 இல் ருத்துராஜ் வந்தார். வழக்கமாக முதலில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும் ருத்துராஜ் இங்கே தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடினார். ஷார்ட் பால்களை மடக்கி சிக்சர், லேட் கட்டாக ஆப் சைடில் பவுண்டரி என க்ளாஸாக அதிரடி ஆட்டம் ஆடினார். 22 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆட நினைத்து விக்னேஷ் புதூர் எனும் இளம் இடதுகை ஸ்பின்னரின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார். இந்த விக்னேஷ் புதூர் கேரளாக்காரர். மும்பை அணி தங்களின் திறன் தேடும் குழுவின் வழி கண்டுபிடித்த வீரர். அவரை தங்களுடைய முகாமில் பயிற்சி கொடுத்து ஏலத்தில் எடுத்து அணிக்குள் கொண்டு வந்தனர்.

MI
MI

ருத்துராஜ் மட்டுமல்லாமல் ஸ்பின்னர்களை அட்டாக்கிங்காக ஆடும் சிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டுகளையும் விக்னேஷ் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே அவர் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. சென்னை அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் இழந்துகொண்டே இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 5 விக்கெட்டுகள் இருந்தது.

Vignesh

நீண்ட நேரமாக நின்று ஆடியிருந்த ரச்சின் ரவிந்திரா கடைசியில் விக்னேஷ் புதூர் வீசிய 18 வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து அரைசதத்தை கடந்து போட்டியையும் சென்னை பக்கமாக திருப்பினார். நமன் தீர் வீசிய 19 வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட் ஆகி 'பொட்டு வச்ச தங்கக் குடம்...' பாடலோடு தோனி உள்ளே வர, சென்னை ரசிகர்கள் நோக்கம் வீணாகவில்லை என திருப்திப்பட்டுக் கொண்டனர்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. சாண்ட்னர் கடைசி ஓவரை வீச முதல் பந்தையே ரச்சின் மிட் விக்கெட்டில் சிக்சர் அடித்து போட்டியை முடித்த் வைத்தார். தோனி ரன்னே அடிக்கவில்லை. 'பொட்டு வச்ச தங்கக் குடம்...' பாடலுக்கு தோனி எண்ட்ரி கொடுத்ததே போதும் என்கிற திருப்தியில் ரசிகர்கள் உற்சாகமாக மைதானத்தை விட்டுக் கிளம்பினர்.

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி... மேலும் பார்க்க