சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!
Delhi Exit Poll: முந்தும் பா.ஜ.க; காங்கிரஸ், ஆம் ஆத்மி நிலை என்ன?| கருத்துக்கணிப்பு முடிவுகள்
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கி மாலை 6 மணியுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.
இந்த மும்முனைப் போட்டியில் தலைநகரைக் கைப்பற்றப் போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதில் முன்னணி பத்திரிக்கை ஊடகங்கள் சொல்வதென்ன என்பதைப் பார்க்கலாம்.
People's Pulse
ஆம் ஆத்மி - 10 - 19
காங்கிரஸ் - 0 - 0
பா.ஜ.க - 51 - 60
Matrize
ஆம் ஆத்மி - 32 -37
காங்கிரஸ் - 0 - 1
பா.ஜ.க - 35 - 40