செய்திகள் :

Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி

post image

டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.

அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.

Delhi Pollution - டெல்லி காற்று மாசு
Delhi Pollution - டெல்லி காற்று மாசு

மறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுத்தாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கொதித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் பாஜக அரசுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தது.

பின்னர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, உடனடியாக இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், வாகனம் வெளியேற்றும் காற்று மாசின் அடிப்படையில் அத்தகைய வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர்.

அதன் பின்னர், ஜூலை 3 தேதி முதல் எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அரசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திருப்பிக்கொடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

இத்தகைய சூழலில், டெல்லியின் மாசு சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதாகவும், தான் டெல்லிக்கு வந்தால் இரண்டு மூன்று நாள்கள்தான் தங்குவேன் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

உத்தரப்பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "டெல்லியில் இரண்டு மூன்று மட்டுமே நான் தங்குவேன். டெல்லிக்கு சென்றதும் எப்போது அங்கிருந்து புறப்படுவேன் என்றுதான் யோசிப்பேன்.

டெல்லியில் மாசுபாடு சாதாரண மக்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கிறது. இதைத் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், மரக்கன்று நடும் செயல்களைப் பெரிய அளவில் மேற்கொள்வதும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள தீர்வுகள்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025

* "கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி* பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!* தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?* முத... மேலும் பார்க்க

'Sowmiya Anbumani-யை வீழ்த்த, மகளை களமிறக்கிய Ramadoss, டெல்லி ஷாக்! | Elangovan Explains

'ராமதாஸ் Vs அன்புமணி' இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் தனக்கு எதிராய், அன்புமணியை கொம்பு சீவி விடுவது மருமகள் சௌமியா தான் என ராமதாஸுக்கு கோபம். பாமக-வை கண்ட்ரோல் எடுக்க நினைக்கு... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி: "ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்!" - தமிழிசை உறுதி

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது அதிமுக -பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “... மேலும் பார்க்க

`` 'உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்; சேவை உரிமைத் திட்டத்தை செயல்படுத்துங்கள்!"- அன்புமணி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை... மேலும் பார்க்க

"இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்" - சீமான் ஆவேசத்தின் பின்னணி என்ன?

"இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு சிறைவாசிகளுக்குச் சித்ரவதை நடக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்... மேலும் பார்க்க