நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Dhoni: "இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வர மாட்டார்" - இந்திய முன்னாள் வீரர் கூறும் காரணம் என்ன?
ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் வீரர் தோனி, ஒரு தலைமைப் பயிற்சியாளராக அதை நிகழ்த்துவரா என்ற ஏக்கம் பொதுவாகவே ரசிகர்களிடம் உண்டு.
2020-ல் தோனி ஓய்வை அறிவித்த அடுத்த ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மென்ட்டாராக (Mentor) நியமிக்கப்பட்டிருந்தார்.

அதுபோல, என்றேனும் ஒருநாள் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஸ்போர்ட்ஸ் ஊடக வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தோனி அப்படிப் பயிற்சியாளராக வரமாட்டார் என்று தீர்க்கமாகக் கூறி அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் இதுபற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, "தோனி ஒருபோதும் ஹெட் கோச்சாக மாட்டார். அதற்கான வாய்ப்புகள் குறைவு.
தலைமைப் பயிற்சியாளர் வேலை மிகவும் கடினமானது. அதில் ஒரு வீரராக இருந்ததைக் காட்டிலும் பிஸியாக இருக்கக்கூடும்.
வருடத்திற்கு 10 மாதங்கள் சுற்றுப்பயணம், பயிற்சி, அழுத்தம் என இதையெல்லாம் மீண்டும் அனுபவிக்க அவர் விரும்ப மாட்டார்.
தனது வாழ்க்கையில் பல வருடங்களை ஏற்கெனவே கிரிக்கெட்டில் கழித்துவிட்டார்.
இப்போது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைக்கிறார். அதனால் முழுநேர கோச்சிங் அவர் செய்ய மாட்டார்.
ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் இரண்டு மாதங்கள் கோச்சிங் கொடுப்பது ஓகே.
நிறைய வீரர்கள் தங்களின் கோச்சிங் கரியரை சில மாதங்கள் ஐ.பி.எல்லில் செய்வது வழக்கம்தான்.
ஆனால், இந்தியா அணியின் ஹெட் கோச் என்றால் வருடம் முழுக்க வேலை செய்ய வேண்டும்.
எனவே, தோனி அந்த அளவுக்கு இப்போது கிரிக்கெட்டுக்கு நேரம் ஒதுக்க மாட்டார்" என்று கூறினார்.
பின்னாளில் இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளர் ஆவாரா என்பது குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...