செய்திகள் :

Dhoni: `One Last Time' - தோனிக்கு இதுதான் கடைசி சீசன்? சென்னை வந்த தோனியின் டி-ஷர்ட்டில் Morse Code

post image

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது. சேப்பாக்கத்தில்தான் தனது கடைசி ஐ.பி.எல் போட்டி என முன்பே தோனி குறிப்பிட்டதற்கு ஏற்றவாறு கடந்த சீசனனில் வாய்ப்பு அமைந்தது. தோனியும், கிரிக்கெட்டில் தான் அறிமுகமானபோது இருந்த தோற்றத்துடன், நீண்ட முடியுடன் களமிறங்கினார்.

தோனி

ஆனால், சென்னை அணியினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததால், சேப்பாக்கத்தில் நடைபெற்ற பைனலில் விளையாட முடியாமல் போனது. தோனியும் இனி ஐ.பி.எல் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக, இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாகக் கூறி, 2025 ஐ.பி.எல்லில் தான் விளையாடுவதை உறுதிசெய்தார் தோனி. இவ்வாறிருக்க, ஐ.பி.எல் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தோனி இன்று சென்னை வந்திறங்கினார்.

சென்னை அணி நிர்வாகமும், விமான நிலையத்திலிருந்து தோனி வெளியே வரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் தோனி அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் அச்சிடப்படப்பட்டிருக்கும் கோட் வேர்ட் (Morse Code)அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதற்குக் காரணம், `கடைசியாக ஒருமுறை (One Last Time)' என்பதைத் தான் அந்த கோட் வேர்ட் குறிக்கிறது. இதனால், தனது கடைசி ஐ.பி.எல் சீசன் இதுதான் என்று தோனி சொல்கிறாரா இல்லை, வெறுமனே விளம்பரத்துக்காக அப்படி போட்டிருக்கிறாரா என்று சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

Morse Code

மோர்ஸ் குறியீடு என்பது, புள்ளிகள் மற்றும் கோடுகளின் தொடர்ச்சியாக எழுத்துக்கள் மற்றும் எண்களை குறிக்கும் ஒரு தந்திக்குறியீடு. இது, டிட்ஸ் மற்றும் டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் - போட்டிகள் முழு விவரம் இங்கே!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு... மேலும் பார்க்க

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் ப... மேலும் பார்க்க

``பவுலிங் மோசமா இருக்கு; இனிமேலும் பொறுக்க முடியாது..." - பாக். அணி குறித்து வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் அணியின் பவுலிங் மிக மோசமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்திருக்கிறார்.2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கி... மேலும் பார்க்க

CT 2025: `இந்தியாவுக்கு மட்டும் ஒரே மைதானம்... பெரிய சாதகம்' - பேட் கம்மின்ஸ் கூறுவதென்ன?

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், அதுவுமே முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறவில்லை. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு வர முடியாது என பி.சி.சி.ஐ... மேலும் பார்க்க

Sriram Sridharan: ஆஸி., அணிக்கு 6 வருடம் பயிற்சயளித்த ஸ்ரீராம் - உதவிப் பயிற்சியாளராக நியமித்த CSK

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு போட்டியுடன் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் தொடங்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு போட... மேலும் பார்க்க

Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் - உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் 'Fire' ஆன ... மேலும் பார்க்க