செய்திகள் :

Doctor Vikatan: `பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை' - skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா?

post image

Doctor Vikatan:  எனக்கு டீன் ஏஜில் மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள், அநியாயத்துக்கு அழகு விஷயத்தில் அக்கறை செலுத்துகிறாள். அவளுக்கு நேரெதிராக மகன், அதைக் கண்டுகொள்வதே இல்லை.  முகம் கழுவக்கூட சோம்பேறித்தனமாக இருக்கிறான்.  அடிப்படை சருமப் பராமரிப்பு விஷயங்களையாவது பின்பற்றச் சொன்னால், 'பசங்களுக்கு அதெல்லாம் அவசியமே இல்லை... பொண்ணுங்களுக்குத்தான் தேவை...' என்கிறான். பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு இத்தகைய மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையிலேயே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் அவசியமா... ஆண்களுக்குத் தேவையில்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா   

சருமநல மருத்துவர் பூர்ணிமா

அப்படியெல்லாம் இல்லை. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோருக்குமே அவசியம்தான்.  பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு அதிகபட்ச கவனம் தேவையில்லை. அடிப்படை  விஷயங்களைப் பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும். அதாவது, ஆண்களுக்கான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு (skin care and hair care) என்பது ரொம்பவே எளிமையானது.

அடிப்படையாக மூன்று விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தினாலே போதுமானது. அந்த வகையில், முதலில் கிளென்சர் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்கள் என்றால் சாலிசிலிக் அமிலமோ (Salicylic acid), லாக்டிக் அமிலமோ (Lactic acid), மாண்டெலிக் அமிலமோ (Mandelic acid) உள்ள கிளென்சராக தேர்வு செய்யலாம்.  அடுத்து சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். இதைத் தேர்வுசெய்யும்போது மாய்ஸ்ச்சரைசர் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும்.  நிறைய பேர் மாய்ஸ்ச்சரைசில் சன் ஸ்கிரீன் உள்ளதைத் தேர்வு செய்வார்கள். அது தவறு.  எஸ்பிஎஃப் (SPF) 30 முதல் 50 அளவுள்ள மாய்ஸ்ச்சரைசர் சிறந்தது. அதே போல 'நான் காமிடோஜெனிக்' (Non-comedogenic ) என குறிப்பிடப்பட்டுள்ளதைத் தேர்வு செய்ய வேண்டும். அது சரும துவாரங்களை அடைக்காமலும், பருக்களை ஏற்படுத்தாமலும் இருக்கும். பகல் பொழுதுக்கு இந்த இரண்டும் போதும்.

ஷேவிங்கை பொறுத்தவரை ரிவர்ஸ் ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது சிறந்தது.

இரவு, மீண்டும் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேலான ஆண்கள், ஆன்டி ஏஜிங் எஃபெக்ட் வேண்டுமென்றால் ரெட்டினால் கலந்த க்ரீம் பயன்படுத்தலாம்.  பருக்கள், பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை இருந்தால் சரும மருத்துவரை அணுகி, அதற்கேற்ற தயாரிப்புகளை உபயோகிக்கலாம்.  ஷேவிங்கை பொறுத்தவரை ரிவர்ஸ் ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது சிறந்தது.  வாரத்தில் 3 முதல் 4 நாள்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். இரண்டு நாள்களாவது  பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் (Anti-dandruff) ஷாம்பூ உபயோகிக்க வேண்டியதும் அவசியம். ஆண்களைப் பொறுத்தவரை இந்த விஷயங்களை ரெகுலராக செய்து வந்தாலே போதும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

TN Assembly: ``அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?'' - ஆளுநருக்கு குறித்து முதல்வர்

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் சர்ச்சையுடனே தொடங்கியிருக்கிறது. இன்று காலை தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்ப... மேலும் பார்க்க

நான் கலைஞரை சந்தித்த தருணம்! - முன்னாள் பாஜக நிர்வாகியின் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

TN Assembly: `திட்டத்தோடுதான் ஆளுநர் வந்திருக்கிறார்; அதிமுக அரசியல் செய்கிறது'- திருமா சொல்வதென்ன?

சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன்று கால... மேலும் பார்க்க

TN Assembly: ஆளுநரின் விளக்கம், X-ல் நீக்கப்பட்ட பதிவுக்கும் - புதிய பதிவுக்கும் என்ன வித்தியாசம்?

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழத்துக்குப் பிறகு தேசியக் கீதம் பாடப்படவில்லை என, ஆளுநர் ரவி சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

TN Assembly: 2022 முதல் இப்போது வரை... தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை சர்ச்சையும் காரணமும்!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாடு சட்டசபையில் 'ஆளுநர் உரை' என்றாலே சர்ச்சையாகத் தான் உள்ளது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என் ரவி. அப்போதிருந்து இன்று வரையான ஆளுந... மேலும் பார்க்க

Prashant Kishor: மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம்; பிரசாந்த் கிஷோர் கைது!

பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள்கள் ஏற்கெனவே கசிந்துவிட்டதாக கூறி மாணவர்கள் வன்முறையில்... மேலும் பார்க்க