செய்திகள் :

Dulquer Salmaan: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்! - `ஆப்ரேஷன் நும்கூர்' நடவடிக்கை!

post image

பூடானிலிருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் ப்ரித்விராஜ், துல்கர் சல்மான், மம்மூட்டி வீடுகளில் `ஆபரேஷன் நம்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை சோதனை நடத்தினர்.

இந்த மூவரைத் தாண்டி கேரளாவின் முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Dulquer Salman
Dulquer Salman

அவரிடம் கார் வாங்கியதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சுங்கத்துறை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துல்கர் சல்மானின் தந்தை மம்மூட்டி வீட்டில் மொத்தமாக 10 கார்கள் இருந்துள்ளன. அதில் 8 கார்கள் பழைய மாடல் கார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைத் தாண்டி, சோதனை நடத்திய கேரளாவின் ஏழு இடங்களிலிருந்து 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கள் மீது எப்போதும் துல்கர் சல்மான் பெரும் பிரியம் கொண்டவர். ஃபெராரி, பென்ஸ் என சொகுசு கார்களின் உயர் ரகங்களும் அவருடைய கேரேஜில் இருக்கின்றன.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் என்னென்ன கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார், எத்தனை வருடங்களாக அந்த கார்களை அவர் வைத்திருக்கிறார் என்ற விவரங்களைப் பார்ப்போமா...

போர்ஷே 911 ஜிடி3 (991.2):

துல்கர் சல்மானிடம் இருக்கும் கலெக்ஷன்களிலேயே இந்த கார் அவருக்கு மிகவும் பிடித்தமானது எனச் சொல்லலாம்.

இந்த கார் குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முறை பதிவிட்டிருந்த அவர், ``இந்த கார்தான் என்னுடைய ஷெட்களில் இருக்கும் கூர்மையான டூல்'' எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

மெர்சிடெஸ் பென்ஸ் எஸ்.எல்.எஸ். ஏ.எம்.ஜி:

இந்த பென்ஸ் கார் துல்கர் சல்மானிடம் எட்டு வருடங்களாக இருக்கிறது.

வெள்ளை நிறத்திலான இந்த சொகுசு காரை ஃப்யூசர் கிளாசிக் என்று அழைக்கிறார் துல்கர் சல்மான்.

பி.எம்.டபிள்யூ எம்3 இ46:

இந்த மாடலின் தயாரிப்பு நிறுத்தப்பட்டதால், இதனைப் பொக்கிஷமாக துல்கர் சல்மான் தன்னுடைய ஷெட்டில் பாதுகாத்து வருகிறார்.

பயன்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது 50 லட்சத்திற்குக் கிடைக்கிறது.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

இதைத் தாண்டி, இன்னோவா, ஃபெராரி 296 ஜிடிபி, போர்ஷே பனமேரா, மெர்சிடெஸ் மேபேக் ஜி.எல்.எஸ். 600, மெர்சிடெஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், மெர்சிடெஸ் ஏ.எம்.ஜி. ஜி63, மெர்சிடெஸ்-ஏ.எம்.ஜி. ஏ45, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் டிஃபென்டர், வி.டபிள்யூ. போலோ ஜி.டி.ஐ, மினி கூப்பர் எஸ், மாஸ்டா எம்.எக்ஸ்-5 போன்ற கார்களை துல்கர் வைத்திருக்கிறார்.

Mohan Lal: ``சினிமாதான் என் ஆன்மாவின் இதயத் துடிப்பு'' - விருது பெறும் மேடையில் மோகன் லால்

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர்... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் நம்கூர்' - துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை; பரபரக்கும் கேரளா

நடிகர் துல்கர் சல்மான், நடிகர் பிருத்விராஜ் வீடுகளில் ஆபரேஷன் நம்கூர் திட்டத்தின் ஒரு பகுதியாக சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக... மேலும் பார்க்க

Drishyam 3: பூஜையுடன் `த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பு தொடங்கியது; உடனடியாக டெல்லிக்கு விரைந்த மோகன் லால்!

Aமிகவும் எதிர்பார்க்கப்பட்ட `த்ரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி ... மேலும் பார்க்க

Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி

நாயகியை மையப்படுத்திய படம் இதுவரை இப்படியொரு வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்ததில்லையே என திரையுலகை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது ‘லோகா’ (Lokah Chapter 1: Chandra). படத்தில் நீலியாக நாயகி கல்யாணி ப... மேலும் பார்க்க

Lokah: "போலி செய்திகளைப் புறக்கணிக்கவும்" - ஓடிடி வெளியீடு குறித்து தயாரிப்பாளர் துல்கர் விளக்கம்

திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் பெரிய மேஜிக்கை நிகழ்த்தியது. 'லியோ' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்ஸ் மாஸ்டர் சாண்ட... மேலும் பார்க்க

"பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்தபோது நம்ப முடியவில்லை" - மோகன்லால் நெகிழ்ச்சி

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சென்னையிலிருந்து கொச்சிக்கு வந்தார் மோகன்லால். தனக்கு விருது அறிவிக்கப... மேலும் பார்க்க