செய்திகள் :

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்பு பயிற்சியில் ட்ரோன்களின் திறன் குறித்து சோதனை

post image

ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன் குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியின்போது சோதனை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பின் (ஐடிஎஸ்) தலைமையகம் சாா்பில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

‘ட்ரோன்கள் தாக்குதல் தடுப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு: நவீன போா்க்களத்தின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்கள் பங்கேற்ற மாநாடு புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விமானப் படைத் தளபதியும் ஐடிஎஸ் துணைத் தலைவருமான ராகேஷ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியில் இந்திய ராணுவப் படை, விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரா்களும் தொழில்துறையினரும், ஆய்வாளா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனா்.

அப்போது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன்களை முழுமையாக சோதனையிடவுள்ளோம்’ என்றாா்.

போா், போா்க்களம் மற்றும் போா்களின்போதான மோதல்கள் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவப் போா் கல்லூரியில் கடந்த மாதம் முதல்முறையாக முப்படையினா் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் முப்படைகளும் பங்கேற்கும் மற்றொரு பிரதான பயிற்சி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினாா் குடியரசுத் தலைவா்!

தில்லியில் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விருதுகளை வழங்கி கெளரவித்தாா். 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், கட... மேலும் பார்க்க

வரியில்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைவது கவலைக்குரியது: காங்கிரஸ்

மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் (ஸ்மாா்ட்ஃபோன்) போன்ற வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் வெகுவாக குறைந்திருப்பது வழக்கத்துக்கு மாறானது என்று காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்தது. இருதரப்பு வ... மேலும் பார்க்க

அவதூறு சட்டத்தை குற்றமற்றதாக்கும் நேரம் வந்துவிட்டது: உச்சநீதிமன்றம்

குற்ற அவதூறு வழக்கில் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ‘அவதூறு சட்டத்தை குற்றமற்ாக்கும் நேரம... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

கொல்கத்தாவில் நீடிக்கும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, கனமழை, காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்... மேலும் பார்க்க

சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்ததும் ஆசாம் கான் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும்: அகிலேஷ்

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆசாம் கான் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். பல்வேறு வழக்குகளில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ம... மேலும் பார்க்க