செய்திகள் :

India - Pakistan : `சீனா ஜெட்டை இந்தியா பயன்படுத்தியதா?' - பாகிஸ்தான் கேள்வியும் சீனாவின் பதிலும்

post image

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இந்தியா புதன்கிழமை ஏவுகணைகள் மூலம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயாரில் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா சீனா ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

Pakistan Attack

சீனா, பாகிஸ்தானின் முக்கிய ஆதரவாளராகவும், அதன் மிகப்பெரிய ஆயுத சப்ளையராகவும் இருக்கிறது. உலகளாவிய ஆயுத சப்ளைகளை கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2019-2023 வரை பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சுமார் 82 சதவிகிதம் சீனாவிலிருந்து வந்தவை.

பதற்றமான சூழல்

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில் வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்க, சீன அதிபர் ஜி ஜின்பிங் புதன்கிழமை நான்கு நாள் பயணமாக ரஷ்யா செல்லவிருந்தார். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

காஷ்மிர் | இந்தியா பாகிஸ்தான் எல்லை

சமீபத்தில் நடந்த தாக்குதலில், பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் ஜெட் விமானங்கள் உட்பட எல்லையில் உள்ள ஐந்து இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இதற்கு சீனாவின் J-10C ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக்டார் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் செய்தி குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, இந்தியா சீன ஜெட் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Chinese foreign ministry spokesperson Lin Jian
Chinese foreign ministry spokesperson Lin Jian

அதற்கு அவர், ``இந்தியாவும் பாகிஸ்தானும் இந்தச் சூழலை மேலும் மோசமாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். சீன ஜெட் விமானங்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சீனா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்த வில்லை.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க