IPL 2025: டாப் 3 இடத்தில் கோப்பையே வெல்லாத அணிகள்; ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சுவாரஸ்யம்!
ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளை ஆடி முடித்துவிட்டன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இப்போதைய நிலவரப்படி, இதுவரை கோப்பையையே வெல்லாத 3 அணிகள் டாப் 3 இடத்தில் இருக்கின்றன.

சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவையும் இரண்டாவது போட்டியில் சென்னை அணியையும் வீழ்த்திய பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 2 மற்றும் 3 வது நீடிக்கின்றன. இந்த அணிகளும் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்றிருக்கின்றன.
ஆனால், பெங்களூரு அணியின் ரன்ரேட் இவர்களின் ரன்ரேட்டை விட அதிகமாக இருக்கிறது. அதனால்தான் பெங்களூரு அணி முதல் இடத்தில் இருக்கிறது.
தலா 5 முறை சாம்பியனான மும்பை மற்றும் சென்னை அணிகள் முறையே 5 மற்றும் 7 வது இடத்தில் நீடிக்கின்றன. மூன்று முறை கோப்பையை வென்றிருக்கும் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த அணிகள் தலா மூன்று போட்டிகளில் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கின்றன.

சீசனின் தொடக்கத்தில் இப்படித்தான் இருக்குமென எடுத்துக்கொள்ள முடியாது. பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாகச் சீராக ஆடி வருகின்றன. அதனால் இந்த சீசனில் பெரிய சர்ப்ரைஸை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...