Kamal Haasan: "கன்னட மொழியின் வரலாறு தெரியாம பேசுறாரு..." - கமல் ஹாசனிற்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
கன்னட மொழி குறித்த கமலின் கருத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கமல் ஹாசனுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவுக்குக் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வருகை தந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமாரைப் பாராட்டிப் பேசிய கமல்ஹாசன், உங்க பாஷை தமிழில் இருந்து வந்தது என்று கூறியிருந்தார்.

இதற்குக் கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கன்னட அமைப்புகள் கமல் ஹாசனுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்களும் கமல் ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கமல் ஹாசனின் கருத்தை விமர்சித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று (மே 28) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
அதெல்லாம் கமல் ஹாசனுக்குத் தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY