``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
Kim Sae-ron: சடலமாக மீட்கப்பட்ட பிரபல கொரிய நடிகை; கொலையா, தற்கொலையா..? -விசாரணையில் காவல்துறை!
தென் கொரியாவின் பிரபல நடிகை கிம் சே-ரோன். 24 வயதான இவர், 2010-ம் ஆண்டு 'தி மேன் ஃப்ரம் நோவேர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் கடத்தப்பட்ட குழந்தையாக நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். தென் கொரியாவின் சிறந்த புதிய நடிகைக்கான விருதையும் வென்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், பல்வேறு விருதுகளையும் குவித்தார். இந்த நிலையில், 2022-ம் ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஒரு விபத்தை சந்தித்தார். அதற்காக அவருக்கு 20 மில்லியன் வோன் ($13,800) அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது முதல் அவரின் நடிப்பு வாழ்க்கை சிக்கலை சந்திக்கத் தொடங்கியது.
மக்கள் அவரைப் பார்த்து வந்தப் பார்வை மாறியதாகக் கூறப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அவரைக் காணச் சென்ற அவரின் நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரின் உடலைக் கைப்பற்றியிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கொலை நடந்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை தொடரும் எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.