செய்திகள் :

Koneru Humpy: தந்தையின் பயிற்சி; சூப்பர் கம்பேக் - இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கோனேரு ஹம்பி யார்?

post image
உலக ரேபிட் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இந்தத் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி மற்றும் ஹரிக்கா துரோணவள்ளி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 11-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ஐரீன் சுகந்தரை கோனேரு ஹம்பி வீழ்த்தி 8 1/2 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மோடி உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இருகின்றனர்.

மோடி, கோனேரு ஹம்பி

வெற்றிபெற்றது குறித்து பேசிய கோனேரு ஹம்பி, “இது எனது இரண்டாவது உலக ரேபிட் பட்டம். நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உண்மையில், இறுதிப்போட்டி டை-பிரேக்கரை நோக்கி செல்லும், கடினமான ஒருநாளாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் நான் ஆட்டத்தை முடித்ததும், நடுவர் என்னிடம் வெற்றி பெற்றதாகக் கூறினார். மிகவும் பதட்டமான தருணமாக இருந்தது" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

37 வயதான கோனேரு ஹம்பி ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே செஸ் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றிருக்கிறார். இதன் மூலம் முதல் இந்திய பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட், ஆசிய விளையாட்டுகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று குவித்திருக்கிறார்.

கோனேரு ஹம்பி

சதுரங்கத்தில் மிகவும் வலிமையான நபர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவருக்கு அவர் தந்தை கோனேரு அசோக்தான் பயிற்சி அளித்திருக்கிறார். ஏற்கனேவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் கலந்துகொண்டு உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் கோனேரு ஹம்பி பிரசவம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் செஸ் விளையாட்டில் களமிறங்கி 2024 ஆம் ஆண்டிற்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவைப் பெருமை அடைய செய்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் கோனேரு ஹம்பி!!!

Vaishali: உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; அசத்திய வைஷாலி.. வாழ்த்திய விஸ்வநாத் ஆனந்த்!

செஸ் விளையாட்டில் இந்த வருடம் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம், பதக்கங்கள் கொண்டுவந்தவர்களின் பட்டியலில் குகேஷ், கொனேரு ஹம்பி ஆகியோரோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி இணைந்துள்ளார். இந்தியாவின் செஸ் கிராண... மேலும் பார்க்க

Magnus Carlsen: FIDE விதி தளர்வால் கிடைத்த வாய்ப்பு... சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்த கார்ல்சன்!

நியூயார்க்கின் வோல் ஸ்ட்ரீட்டில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் (FIDE) சார்பில், உலக ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்றது. இதில், உலகின் நம்பர் ஒன்... மேலும் பார்க்க

Magnus Carlsen: 'ஜீன்ஸ் அணிந்ததால் தகுதி நீக்கம்..!' - வெளியேறிய கார்ல்சன்; நடந்தது என்ன?

ஐந்துமுறை உலக சாம்பியனான் மேக்னஸ் கார்ல்சன் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுத்ததால் உலக ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவருக்கு அபராதம் வித... மேலும் பார்க்க

R.N.Ravi : ``குகேஷ் வென்றவுடன் இந்தியா முழுவதுமிருந்து எனக்கு போன் வந்தது!'' - ஆளுநர் ரவி பாராட்டு!

உலக செஸ் சாம்பியனாகியிருக்கும் குகேஷூக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய ஆளுநர், 'குகேஷ் வென்றவுடன் இந்தியா முழுவதுமிருந்தும் வெளிநாடுகள... மேலும் பார்க்க

Chess: வேண்டுமென்றே தோற்றாரா சீன வீரர்...? - தோல்வி குறித்து டிங் லிரென் விளக்கம்!

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன்.செஸ்இறுதிப்போட்டியின் 14வது சுற்றில் வெற்றி பெறுபவ... மேலும் பார்க்க

Gukesh: ``டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன்; ஆனால்...'' - நெகிழ்ச்சியோடு பேசிய குகேஷ்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் 18 வயது வீரரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் பலப்பரீட்சை நடத்தினார்.இருவரும் தலா ஆறரை புள்ளிகள் பெற்ற நிலையில் 14 -வது சுற்று... மேலும் பார்க்க