மேலப்பாளையத்தில் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல கோரி எம்பியிடம் மனு
Lijomol Jose: ''`ஜெய் பீம்' செங்கேணி கதாபாத்திரம் என் வாழ்க்கையையே மாற்றியது!" - லிஜோமோல் பேட்டி
உணர்ச்சி மிகுந்த தத்ரூபமான நடிப்பால் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸ்.

சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "ஃப்ரீடம்" திரைப்படம் ஜூலை 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள லிஜிமோல் ஜோஸுடன் உரையாடியதிலிருந்து...
``'ஃப்ரீடம்' படம் உண்மைக் கதை எனச் சொல்வதால், நிச்சயம் அது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். அந்தத் திரைப்படக் காட்சிகளை நடிக்கும் வேளையில், நிச்சயம் உங்கள் மனம் பாரமாகியிருக்கும். அந்த உணர்வு உங்களுக்கு எப்படி இருந்தது?”
``திரைப்படக் கதை நமக்குத் தெரிந்திருந்தாலும், அந்த உணர்ச்சி மிகுந்த திரைக் காட்சிகளை நடிக்கும்போது நம் மனதிலிருந்து உணர்வுகள் தானாகவே வெளிப்படும். எனக்கு ஒவ்வொரு திரைப்படக் காட்சி நடிக்கும்போதும் மனம் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து நடிக்கத் தயாராகினாலும், அந்தந்தத் தருணத்தில் உணர்வு எப்படி வெளிப்படுகிறதோ, அதுதான் இறுதியான நடிப்பு.”

``எந்தக் கதாபாத்திரம் உங்கள் வாழ்வையே மாற்றிவிட்டது எனச் சொல்வீர்கள்?”
``'ஜெய் பீம்' படத்தின் செங்கேணி கதாபாத்திரம்தான் வாழ்வையே மாற்றியதாக நினைக்கிறேன்.”
``எந்த இயக்குநர் உங்களிடம் வந்து கதை இருக்கிறது எனச் சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்வீர்கள்?”
``அப்படிக் கதையே கேட்காமல் நான் ஓகே சொல்வேனா எனத் தெரியவில்லை... நிச்சயம் கதை கேட்டுத்தான் முடிவு செய்வேன்.”

``உடன் நடித்தவர்களில் யாருடைய நடிப்பு நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததைக் கண்டு நீங்கள் பிரமித்துப் போனீர்கள்?”
``நிறைய பேர் இருக்கிறார்கள். மணிகண்டன் அண்ணனின் நடிப்பைப் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன். தற்போது வெளியான 'பொன்மான்' படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் அருமையாக நடித்திருந்தார். பேசிலின் கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பாக இருந்தன. நான் எதிர்பார்த்ததை விட அவர் அருமையாக நடித்திருந்தார்.”
``நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ரொம்ப பிடித்துப் போன காஸ்ட்யூம் அல்லது படத்தின் செட்டிலிருந்து நீங்கள் விரும்பியும் எடுத்துச் செல்ல இயலாத காஸ்ட்யூம் இருந்திருக்கும். அப்படி நீங்கள் ரொம்ப விரும்பியும் எடுத்துச் செல்ல இயலாத காஸ்ட்யூம் அல்லது நீங்கள் விரும்பி எடுத்துச் சென்ற காஸ்ட்யூம் இருந்தால், அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்...”
``நான் ஒரு வெப் சீரிஸில் பண்ணியிருந்தேன். அந்த வெப் சீரிஸில் நடிக்கும்போது நான் அணிந்த ஒரு காஸ்ட்யூம் ரொம்ப பிடித்திருந்தது. அந்தக் காஸ்ட்யூமை நான் கேட்டு எடுத்துச் சென்றிருக்கிறேன். கேட்காமல் எடுத்துச் சென்றதில்லை. அந்தக் காஸ்ட்யூம் ஒரு சுடிதார். அந்தச் சுடிதார் பிடித்துப் போனதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் அந்த வெப் சீரிஸில் நடிக்கும்போது பெரும்பாலான நாட்கள் அந்தச் சுடிதாரைத்தான் அணிந்திருந்தேன். அந்தச் சுடிதாரின் நினைவாக அதை கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறேன்.”