செய்திகள் :

Mothers of India: `தாயால்கூட மன்னிக்க முடியாது' - இவர்கள் மூவரும் இந்தியாவின் அம்மாக்கள்

post image
சில அம்மாக்கள், தாங்கள் சந்தித்த துயரங்களையும் மீறி சமூகத்துக்கு உதாரணங்களாகி விடுகிறார்கள். கடந்த 12 வருடங்களில் இப்படிப்பட்ட அம்மாக்கள் மூன்று அம்மாக்களைப்பற்றிதான் இங்கே பேசவிருக்கிறோம். யார் இந்த அம்மாக்கள்..?
Sexual Harassment (Representational Image)

முதல் அம்மா:

கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராயின் அம்மா. கொல்கத்தா நீதிமன்றம் சஞ்சய் ராயை சாகும்வரை சிறையில் அடைக்க தீர்ப்பளிப்பதற்கு முன்னரே, 'எனக்கும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உணரும் வலியை நான் உணர்கிறேன். அந்தப் பெண்ணும் என்னுடைய மகளைப் போலத்தான். என் மகன் குற்றம் செய்திருக்கிறான் என்றால், நீதிமன்றம் என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும், எனக்கு எந்தவொரு மறுப்பும் கிடையாது' என்று வாழும் நீதிதேவதையாய் பேசியிருந்தார் சஞ்சய் ராயின் அம்மா. எப்படிப்பட்ட தவறையும் மன்னிக்கும் உள்ளம் தாய்க்கு உண்டு என்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்களை பெற்ற தாயால்கூட மன்னிக்க முடியாது என்பதை அழுத்தம்திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சஞ்சய் ராயின் அம்மா.

இரண்டாவது அம்மா:

சென்னையைச் சேர்ந்த தஷ்வந்தின் அம்மா சரளா. யார் இந்த தஷ்வந்த்..? 2017-ல் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்த தஷ்வந்த், அச்சிறுமியின் சடலத்தை சாக்குமூட்டையில் எடுத்துச்சென்று எரித்த கொடுமையான குற்றவாளி. போலீசாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு ஜாமீன் தரப்பட, வீட்டுக்கு வந்தவர் அவருடைய அம்மாவையும் கொலை செய்தார். அதற்கு காரணமாக அவர் சொன்னது, 'ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டாயே' என்று திட்டிக்கொண்டே இருந்தார். என்னை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார். அதனால் கொன்றுவிட்டேன்' என்றார். தன் மகன் ஒரு சிறுமிக்கு செய்த தவறைக் கண்டித்ததால், அந்த மகனாலேயே கொலை செய்யப்பட்டார் அந்த அம்மா.

kolkatta rape case

மூன்றாவது அம்மா:

நிர்பயாவின் அம்மா ஆஷா தேவி. மொத்த இந்தியாவும் பதறிப்போன அந்த பாலியல் வன்கொடுமைக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தன் வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துவிட்டால் வெளியுலகத்துக்கு முகம் காட்ட பெற்றவர்கள் அவமானப்படுவார்கள் என்கிற பொதுபுத்தியை உடைத்தவர் நிர்பயாவின் அம்மா. 'நிர்பயா ஏன் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் சினிமாவுக்குச் சென்றார்' என்ற சின்னப்புத்திக்காரர்களை அலட்சியம் செய்து, 'இந்த தேசம் நிர்பயா எனக் குறிப்பிடும் பெண்ணின் தாய் நான். அவளை நீங்கள் இந்தியாவின் மகள் என அழைக்கும் முன்பே அவள் என் மகள்' என்று மொத்த இந்தியாவுக்கும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் இந்த அம்மா. '2018-ல் என் மகளுக்குக் கொடுமை நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டும் ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை' என்று டெல்லி கமிஷன் ஃபார் வுமனில் போர்க்குரல் எழுப்பியவர் இந்த அம்மா.

இனியொரு நிர்பயா வேண்டாம்

குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அன்று, 'இது எனக்கு மட்டுமல்ல; பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்' என்றவர், அதன் பிறகும் ஓய்ந்துபோய் வீட்டுக்குள் முடங்கவில்லை. 'எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது என நான் நின்றுவிட விரும்பவில்லை. பெண்களுக்கெதிரான சின்னச்சின்ன குற்றங்களில்கூட நாம் கவனம் செலுத்த வேண்டும். இனியொரு நிர்பயா நீதிக்காகப் போராடும் சூழலை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது' என்று முழங்கியவர், சென்ற வருடத்தின் (2024) இறுதியில் நடந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான தேசிய மாநாட்டில், 'என் மகள் இறந்து 12 வருடங்கள் கடந்த பிறகும் இந்த தேசத்தில் எதுவும் மாறவில்லை. இந்த நாடு இன்னமும் தன்னுடைய மகள்களுக்கு பாதுகாப்பானதாக மாறவில்லை. என் மகளுக்கு நிகழ்ந்தது இன்னொரு மகளுக்கு நிகழக்கூடாது. பள்ளிக்கூடம், அலுவலகம் என எங்குமே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெரு நகரங்களில், சிறு நகரங்களிலேயே இப்படி என்றால், கிராமங்களைச் சொல்லவா வேண்டும்' என தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Respect women

தனியொரு பெண்ணுக்கு பாதுகாப்பில்லை எனும்போது, பெற்ற பிள்ளைகளேயானாலும் எதிர்த்து நின்றவர்கள்... தன் மகளுக்கு நிகழ்ந்தது அடுத்த வீட்டு மகள்களுக்கு நடந்துவிடக்கூடாது என்பதற்காக போராடிக்கொண்டே இருப்பவர்கள்... இவர்கள் சஞ்சய் ராயின் அம்மாவோ, தஷ்வந்தின் அம்மாவோ அல்லது நிர்பயாவின் அம்மாவோ அல்ல... இவர்கள் இந்தியாவின் அம்மாக்கள். மரியாதைக்குரிய வணக்கங்கள் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் முகமாக இருக்கும் உங்கள் மூவருக்கும்..!

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

`எம் புள்ளைகளுக்காக எடுத்த முடிவு' - நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுகன்யாவின் கணவர் கருப்பசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்ற... மேலும் பார்க்க

``காளி போன்ற பெண்கள் ராணுவத்திற்கு வேண்டும்’’ - ராணுவ தளபதி உபேந்திர த்விவேதி!

வருடாந்திர ராணுவ செய்தியாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி (Upendra Dwivedi), "பெண் அதிகாரிகள் ராணுவத்தில் மிக சிறப்பாகச... மேலும் பார்க்க

’’பெண்களையும் சிறுமிகளையும் அழிக்கப் பார்க்கிறார்கள்’’ - பாகிஸ்தான் மாநாட்டில் கொதித்த மலாலா..!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கடந்த ஜனவரி 11,12 ஆகிய தேதிகளில் கலந்துகொண்டு தாலிபன்கள... மேலும் பார்க்க

Pakisthan: மீண்டும் தாய்நாட்டுக்கு செல்லவிருக்கும் மலாலா! காரணம் இதுதான்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் கல்வியை வளர்க்... மேலும் பார்க்க

நொய்டா: பெண் பயிற்சியாளர்களை நியமிக்க மகளிர் ஆணையம் பரிந்துரை; காரணம் இதுதான்!

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் யோகா பயிற்சி மையங்களில் பெண் பயிற்சியாளர்களை கட்டாயம் நியமிக்க வேண்டுமென்று நொய்டாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க