கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
Pakistan: "தோட்டாவிற்குத் தோட்டா எனப் பதில் அளிக்க வேண்டுமா?" - பாகிஸ்தானிடம் மோடி கேள்வி
பிரதமர் மோடி குஜராத்திற்குச் சென்றிருக்கிறார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் முதன்முதலாகத் தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கின்றார்.
அங்கே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, "ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அரசு மரியாதை செலுத்தியது.
இந்தியாவிலிருந்து தீவிரவாதம் என்னும் முள்ளை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் என்பது பிராக்ஸி போர் அல்ல... அது உங்களுடைய (பாகிஸ்தான்) தந்திரம். அப்படி நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள்.

75 ஆண்டுகளாகச் சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், மக்கள் என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டுமா?
அதற்குப் பதில், தோட்டாவிற்குத் தோட்டா என நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா?
இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், எங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்போது திரும்பத் தாக்க யோசிக்கமாட்டோம். எங்களுடையதும் போர் வீரர்களின் பூமிதான் என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறோம்.
நான் இங்கு இரண்டு நாட்களாக இருக்கிறேன். அனைத்து இடங்களில் காவிக் கடல் கொக்கரிப்பது போல உணர்கிறேன். மூவர்ணக் கொடியும், தாய் நாட்டின் மீது அதீத அன்பும் அனைத்து உள்ளங்களில் தெரிகிறது.
தீவிரவாதம் உங்களுக்கு என்ன நன்மையைத் தந்தது? இதைப் பாகிஸ்தான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தானைத் தீவிரவாதம் என்னும் நோயிலிருந்து விடுவியுங்கள். அமைதியான வாழ்க்கை வாழுங்கள், நன்கு உண்ணுங்கள் அல்லது என்னுடைய தோட்டாக்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb