செய்திகள் :

Paranthu Po: 'குழந்தைகள், சூரியகாந்திப் பூ, ராம்!' - 'பறந்து போ' படத்தின் சிறப்பு திரையிடல்!

post image

இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 'மை விகடன்' என்ற களம் மூலம் விகடன் வாசகர்கள் தொடர்ந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.

கடந்த மாதம்கூட, பயணக்கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. அவற்றில் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 'ஒரு கடிதம் எழுதினேன்' என்ற கட்டுரைப் போட்டி ஒன்றும் நடைபெற்றது.

Paranthu Po Special Screening
Paranthu Po Special Screening

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அனுப்பும் வகையிலும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அனுப்பும் வகையிலும் கடிதங்களை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, Vikatan Play-வில் இயக்குநர் ராம் குறித்தான Quiz போட்டி ஒன்றும் நடைபெற்றது.

இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், இயக்குநர் ராமுடன் இணைந்து 'பறந்து போ' படத்தின் சிறப்புக் காட்சியைக் காணலாம் என அறிவித்திருந்தோம்.

ஏராளமான வாசகர்கள் தங்களின் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நெகிழ்ச்சியான பல கடிதங்களை எழுதியிருந்தனர். இயக்குநர் ராம் தொடர்பாக Vikatan Play-வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பலர் சரியான பதில்களைக் கூறியிருந்தனர்.

வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பலவற்றை இயக்குநர் ராமும் வாசித்தார். பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை எழுதியவர்களுக்காக நேற்றைய தினம் 'பறந்து போ' படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் தொடங்கி அனைவரும் திரையரங்கத்தை சிரிப்பொலிகளாலும் கைதட்டல்களாலும் நிரம்பச் செய்தனர்.

Paranthu Po Special Screening
Paranthu Po Special Screening

படம் முடிந்த பிறகு இயக்குநர் ராம் திரைப்படம் தொடர்பாக வாசகர்களுடன் கலந்துரையாடினார். வாசகர்களும் திரைப்படம் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பினர். அதுபோல, அவர்கள் இயக்குநர் ராமுக்காக கவிதைகளையும், கடிதங்களையும் வாசித்தனர்.

அரங்கிலிருந்த குழந்தைகளுக்கு 'பறந்து போ' திரைப்படம் மிகவும் நெருக்கமாகிட, இயக்குநர் ராமுக்கு அவர்களும் சூரியகாந்திப் பூ, ஓவியங்கள் என அழகான பரிசுகளையும் வழங்கினர்.

Vijay: "உங்கள் ஆதரவை மறக்க முடியாது" - விஜய் சந்திப்பு பற்றி சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்து... மேலும் பார்க்க

Phoenix: ``தமிழ் சினிமாவுக்கு 10 ஹீரோக்கள் கெடச்சுருக்காங்க..."- தயாரிப்பாளர் டி.சிவா

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்... மேலும் பார்க்க

பறந்து போ: "மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள்" - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சிறப்புக் காட்சியில் படம் பார்... மேலும் பார்க்க

Priyamani: "நடிப்பிற்காக நான் ஹோம்வொர்க் செய்யமாட்டேன்..!" - பட நிகழ்வில் ப்ரியாமணி

நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் 'குட் வைஃப்'. 'தி குட் வைஃப்' எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள். ஜூலை 4-ம் தேதி இந்த ச... மேலும் பார்க்க

Parandhu Po: 'அழுதாங்க ஆனா சிரிச்சு சிரிச்சு அழுதாங்க' - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. இத்திரைப்படம் நாளை(ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நி... மேலும் பார்க்க

``திருபுவனம் அஜித்குமார் மரணம் மாதிரி இந்தப் படத்திலும் ஒரு கதை" - 'பீனிக்ஸ்' குறித்து ஆர்த்தி கணேஷ்

ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடிப்பில் உருவான 'பீனிக்ஸ்' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி நாளை வெளியாகிறது. இந்தப் படத்துக்கான பிரஸ் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில், சினி... மேலும் பார்க்க