செய்திகள் :

Saina Nehwal: `மீண்டும் முயற்சிக்கிறோம்" - பிரிந்த கணவருடன் இணைந்த சாய்னா நேவால்

post image

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். பல சர்வதேச தொடர்களில் இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்துள்ளார். 2012-ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலம், கமன்வெல்த் போட்டிகளில் இரு தங்கம் என தொடர்ந்து தன் சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவந்தார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் தன்னுடன் பயிற்சி பெற்ற காஷ்யப்யை 10 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்தவர், கடந்த 2018-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

சாய்னா நேவால் திருமணம்
சாய்னா நேவால் திருமணம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ள காஷ்யப், சர்வதேச அரங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். காஷ்யப் பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறினார். சாய்னாவுடன் இணைந்து பணியாற்றினார். இதற்கிடையே, ஜூலை 13-ம் தேதி திருமண வாழ்க்கையில் இருந்து விலகவுள்ளதாக சாய்னா நேவால் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, காஷ்யப்-யும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த நேரத்தில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என மட்டும் யோசிக்கிறேன். நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். சாய்னாவின் இந்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் சாய்னாவும் கஷ்யப் பருபள்ளியும் மீண்டும் இணைந்து வாழ்வதாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக சாய்னா வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், ``சில நேரங்களில் தூரம் உங்களுக்கு இருப்பின் மதிப்பைக் கற்பிக்கிறது. இதோ - மீண்டும் முயற்சிக்கிறோம்." என இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Tsunami: 12 வருடங்களுக்கு முன்பே கணித்தாரா ஜப்பானிய கலைஞர்? - `July5Disaster' வைரலாக காரணம் என்ன?

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவி... மேலும் பார்க்க

Dhoni: "கணவர் கோபமாக இருக்கும்போது எதுவும் பேசாதீர்கள்" - ரிலேஷன்ஷிப் ஜோக் அடித்த தோனி!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு கூலான கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஜாலியான மனிதரும் கூட என்பதை நெருக்கமாக பின்தொடரும் ரசிகர்கள் மட்டுமே அறிவர்.சமீ... மேலும் பார்க்க

Masturbation: ``சுய இன்பத்திற்காக தினம் 30 நிமிட இடைவெளி'' - ஸ்வீடன் நிறுவனம் முடிவு; காரணம் என்ன?

ஸ்வீடனைச் சேர்ந்த எரிகா லஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தனது ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒரு தனித்துவமான விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம், தினமும் 30 நிமிடங்கள் ஊழியர்களுக்கு ச... மேலும் பார்க்க

ஒரு வயது குழந்தை கடித்து உயிரிழந்த நாகப்பாம்பு... பீகாரில் நடந்த வினோதம்

பீகாரில் ஒரு வயது குழந்தை கடித்து நாகப்பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவமானது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.அந்தக் குழந்தையை குடும்பத்தினர் பெட்டியா ந... மேலும் பார்க்க

``வீட்டில் உணவு சமைக்க தினமும் 1,150 ரூபாய்'' கணவரிடம் வசூலிக்கும் மனைவி - கூறும் காரணம் என்ன?

இரண்டு குழந்தைகளின் தாயான ரே என்பவர் தனது கணவருக்கு தயாரிக்கும் மதிய உணவுக்காக தினமும் £ 10 (1,150 ரூபாய்) வசூலிப்பதாக டிக் டாக்கில் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் தயாரிக்கப்படும் உணவிற்கும் ஊதி... மேலும் பார்க்க

``பத்மஸ்ரீ விருதை பாதுகாப்பாக வைக்க கூட இடம் இல்லை'' - ஒழுகும் கூரை, வறுமையில் வாடும் துக்கு மாஜ்ஹி

2024-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் கவனிக்கத்தக்கவர் துக்கு மாஜ்ஹி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், ஒவ்வொரு நாளும் தனது மிதிவண்டியில் புதிய இடங்களுக்குச் சென்று, தரிசு நிலத்தில்5,000-க்க... மேலும் பார்க்க