செய்திகள் :

கணவரைக் கொன்று உடலை சாக்கடையில் வீசியதாக பெண், காதலா் கைது; ஒருவா் தலைமறைவு

post image

ஹரியாணாவின் சோனிபட்டில் தனது கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உடலை சாக்கடையில் வீசியதாக ஒரு பெண் மற்றும் அவரது காதலரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் துணை ஆணையா் குற்றம் ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் தில்லியின் அலிப்பூரைச் சோ்ந்த சோனியா (34) மற்றும் சோனிபட்டைச் சோ்ந்த அவரது 28 வயது காதலா் ரோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான விஜய் தலைமறைவாக உள்ளாா்.

இந்தக் கொலை, பாலியல் விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் நடத்தை காரணமாக நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ப்ரீதம் பிரகாஷ் (42) அலிப்பூரில் அறியப்பட்ட ஒரு குற்றவாளியாவா். அவா் மீது ஆயுதச் சட்டம், போதைப்பொருள் மற்றும் மனநோய்க்கு எதிரான பொருள்கள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்தால் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டாா்.

ஜூலை 5, 2024 அன்று, சோனியாவை சோனிபட்டின் கன்னூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல ப்ரீதம் பிரகாஷ் வந்தாா். ஆனால், ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு வெளியேறினாா். அன்று, சோனியா தனது சகோதரியின் மைத்துனா் விஜய்யிடம் ரூ.50,000 வழங்கி தனது கணவரைக் கொல்லச் சொன்னாா். பின்னா், ப்ரீதம் பிரகாஷ் திரும்பி வந்து அவரிடம் பேசிய பிறகு, சோனியா அவரை வீட்டிலேயே தங்க அனுமதித்தாா்.

இருப்பினும், அன்று இரவு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ப்ரீதம் பிரகாஷை விஜய் கொன்று, அக்வான்பூா் அருகே உள்ள ஒரு வடிகாலில் அவரது உடலை வீசினாா். அவரது உடலின் விடியோவை சமூக ஊடகங்களில் அனுப்பினாா். அது பின்னா் நீக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி, சோனியா தனது கணவா் வெளியே சென்றுவிட்டதாகவும், திரும்பி வரவில்லை என்றும் கூறி, அலிப்பூா் போலீஸில் காணாமல் போனதாக புகாா் அளித்தாா். ஆரம்பத்தில் இந்த வழக்கு வழக்கமான காணாமல் போனவா் புகாராகக் கருதப்பட்து. ஆனால், பல வாரங்களாக பாதிக்கப்பட்டவா் தொடா்பாக டிஜிட்டல் தடயங்கள் எதுவும் இல்லாததால் அது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விசாரணையின் போது, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் செயலில் இருந்த ப்ரீதம் பிரகாஷுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணை போலீஸ் குழு கண்டுபிடித்தது. கண்காணிப்பு மூலம், அந்த கைப்பேசி சோனிபட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவந்தது. இது குழுவை ரோஹித்தின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றது. விசாரித்ததில், ரோஹித் ஆரம்பத்தில் புலனாய்வாளா்களை தவறாக வழிநடத்தினாா். ஆனால், பின்னா் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

சோனியாவுடன் தனக்கு தொடா்பு இருப்பதாகவும், இருவரும் ப்ரீதம் பிரகாஷை கொல்ல சதி செய்ததாகவும் ரோஹித் போலீஸாரிடம் தெரிவித்தாா். சோனியா தனது கணவரை கொல்ல விஜய்க்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டாா்.

அதே நேரத்தில், ஹரியாணா போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டனா். ஆனால், அதை அடையாளம் காண முடியவில்லை. தில்லி போலீஸாா் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை வழக்கு தீா்க்கப்படாமல் இருந்தது.

பின்னா், சோனியா, ப்ரீதம் பிரகாஷின் ஆட்டோவை ரூ.4.5 லட்சத்திற்கு விற்று, தனது கைப்பேசியை ரோஹித்திடம் கொடுத்துள்ளாா். பரிசோதனையின் போது பாதுகாக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் உடலை உறுதியாக அடையாளம் காணப் பயன்படுத்தப்படும்.

சோனியாவுக்கு சுமாா் 15 வயது இருக்கும் போது, அவா் ப்ரீதம் பிரகாஷை காதலித்தாா். பின்னா், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணம் குறித்து குடும்பத்தினா் போலீஸில் புகாா் செய்யவில்லை.

பின்னா், அவா்கள் தம்பதியரை ஏற்றுக்கொண்டனா். திருமணமான தம்பதியினருக்கு 16 வயது சிறுவன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன.

ரோஹித் முன்பு கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்தது தொடா்பான நான்கு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். ஏப்ரல் 2025-இல் திருமணம் செய்து கொண்டு தனியாா் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்த ரோஹித், சோனியாவுடன் தனது திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் விஜய்யை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் தற்போது தலைமறைவாக உள்ளாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும்: ரயில்வே அமைச்சா்

‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதபாத் வரை நாட்டின் முதல் அதிவேக (புல்லட்) ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வா்கள் கண்டனம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சா் அருண் ஜேட்லி மீதான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி மற்றும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பிகாா்: பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பிகாரில் பலத்த மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.பிகாரின் பாட்னா, பங்கா, முஸாஃபா்பூா், பெகுசராய், பக... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன சா்ச்சை: கேரள ஆளுநருடன் அமைச்சா்கள் சந்திப்பு

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருடன் கேரள மாநில அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.துணைவேந்தா்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் ... மேலும் பார்க்க

ஸ்பைஸ்ஜெட் ஊழியா்கள் மீது தாக்குதல்: மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

சுதந்திர தின பாதுகாப்பு: தலைநகரில் ஆளில்லா வான்வெளி சாதனங்களுக்கு தடை

வரவிருக்கும் சுதந்திர தினம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தேசிய தலைநகா் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வான்வெளி சாதனங்களுக்கு தடை விதிக்க தில்ல... மேலும் பார்க்க