செய்திகள் :

``SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாடு அரசு அறிவிப்பு

post image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து இன்று (பிப் 3) வெளியாகியிருக்கும் அரசின் அறிவிப்பில், "ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி.

கல்விக்கடன்

மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி

நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும்,

ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

Kalpana Nayak: ``கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை'' -டிஜிபி விளக்கம்

கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்துஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் க... மேலும் பார்க்க

Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை அண்ணா" -சீமான்

சீமானும் தொடர்ச்சியாக தந்தை பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது சர்ச்சைகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறது.பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டு... மேலும் பார்க்க

Kalpana Nayak: தேர்வாணைய முறைகேடு, கொலை முயற்சி?! - புகாரின் பின்னணி என்ன?

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியது இன்று பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வந்த பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பெண்களைத்... மேலும் பார்க்க

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அ... மேலும் பார்க்க

Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது. இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம... மேலும் பார்க்க