செய்திகள் :

Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை அண்ணா" -சீமான்

post image
சீமானும் தொடர்ச்சியாக தந்தை பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது சர்ச்சைகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறது.

பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டும் என்று மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீட்டை ஜன22ம் தேதி முற்றுகையிட்டு எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இப்போது பரபரப்பாகி இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் சீமான், பெரியார் குறித்துப் பேசியது வாக்குச் சேகரிப்பின் போது மோதல்களை ஏற்படுத்தியிருந்தது.

பெரியார் - அண்ணா

இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் சீமான், "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை..! பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி..! 'மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர்..!

நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, 'தம்பி வா தலைமையேற்க வா' என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்..! தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன்..! அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர்..! யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை..! தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

Kalpana Nayak: ``கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை'' -டிஜிபி விளக்கம்

கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்துஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் க... மேலும் பார்க்க

``SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து இன்று (பிப் 3) வெளியாகியிருக்கும் அரசின் அறிவிப்பி... மேலும் பார்க்க

Kalpana Nayak: தேர்வாணைய முறைகேடு, கொலை முயற்சி?! - புகாரின் பின்னணி என்ன?

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியது இன்று பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வந்த பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பெண்களைத்... மேலும் பார்க்க

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அ... மேலும் பார்க்க

Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது. இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம... மேலும் பார்க்க