Siraj: வெற்றிக்குப் பின் கோலியிடமிருந்து வந்த ஸ்பெஷல் நோட்; நெகிழ்ந்த சிராஜ்; வைரலாகும் ட்வீட்ஸ்!
இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற (ஜூலை 31 - ஆகஸ்ட் 4) டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது.
போட்டியின் கடைசி நாளான இன்று கையில் 4 விக்கெட்டுகளுடன் 35 ரன்கள் அடித்தால் வெற்றி எனச் சிரமமில்லாமல் இறங்கிய இங்கிலாந்து அணியை 367 ரன்களில் அல் அவுட் ஆக்கி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது இந்தியா.
இரண்டு இன்னிங்ஸ்களையும் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார். மேலும், பிரசித் கிருஷ்ணா 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த சுப்மன் கில்லுக்கு (754) தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதேபோல், இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகன் விருது வென்றார்.
கிட்டத்தட்ட இங்கிலாந்தின் வசமிருந்த வெற்றியை சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் பறித்ததால் தொடரை 2 - 2 என இந்தியா சமன் செய்திருக்கிறது.
இவ்விருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. "சிராஜும், பிரசித்தும் இருப்பதால் கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது" என்று கேப்டன் சுப்மன் கில் கூட இந்த வெற்றிக்குப் பின்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சிராஜின் கிரிக்கெட் கரியரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் விராட் கோலி அவரைப் புகழ்ந்திருக்கிறார்.
Thank you bhaiya for “Believe”ing in me ❤️ https://t.co/TBWmOMzqmX
— Mohammed Siraj (@mdsirajofficial) August 4, 2025
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கோலி, "இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது.
சிராஜ் மற்றும் பிரசித்தின் மன உறுதிதான் இத்தகைய அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்திருக்கிறது.
குறிப்பாக, அணிக்காக அனைத்தையும் அர்ப்பணிப்பவர் சிராஜ். அவரை நினைத்து சந்தோஷப்படுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
கோலியின் இத்தகைய பாராட்டைத் தொடர்ந்து, "என்மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி" என ட்வீட் செய்திருக்கிறார் சிராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...