செய்திகள் :

Sitaare Zameen Par: "மனித குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம்" -ஆமிர் கானுக்கு சச்சின் வாழ்த்து!

post image

2018 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் என்ற படம், இந்தியில் 'சித்தாரே சமீன் பர் (Sitaare Zameen Par)' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் மூளை வளர்ச்சி மெதுவாக இருக்கும் சவால் உடைய கூடைப்பந்து வீரர்களின் பயிற்சியாளராக ஆமிர் கான் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மைக்கேல் ஜாக்சன் என்ற சொல்லை Love Birds என மாற்ற வேண்டும், படத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் மேற்கோளை சேர்க்க வேண்டும், தாமரை என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று சில காட்சிகளை நீக்க மத்திய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. படக்குழுவும் இதை ஏற்று நாளை (ஜூன் 20ம் தேதி) திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடவிருக்கிறது.

Sitaare Zameen Par

இந்நிலையில் சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்படத்தை முன்கூட்டிய சிறப்புக் காட்சிகளுடன் பார்த்ததாக ஆமிர்கான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்த சச்சின், "மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம். மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்ட பல செய்திகள் இப்படத்தில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று கூறியதாக ஆமீர் கான் கூறியுள்ளார்.

சச்சின், ஆமிர் கான்

மேலும், இப்படத்தைப் பார்த்த எழுத்தாளர் சுதா மூர்த்தி, "மனிதர்களின் குறைபாடுகளை எப்படி புரிந்துகொள்ள வேண்டும். குறைபாடு கொண்டவர்கள் எவ்வளவு நல்ல மனம் கொண்டவர்கள், திறமையானவர்கள் என்பதை இப்படம் அழகாகச் சொல்லியிருக்கிறது. வாழ்க்கையின் உள்ளார்ந்த அர்த்தம் கொண்ட பல தத்துவங்களை இப்படம் நமக்குச் சொல்லிக் கொடுக்கும்" என்று பாராட்டியிருக்கிறார்.

Genelia: ``10 மணிநேர வேலை என்பது சாத்தியமானதே..." - ஜெனிலியா ஓப்பன் டாக்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் 'ஸ்பிரிட்'. இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோனே கமிட்டாகியிருந்தார். ஆனால், அதன் பிறகு அவர் படத்திலிருந்து விலக... மேலும் பார்க்க

ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின், கெளரி கான்..! - ரெஸ்டாரன்ட் தொழிலில் முதலீடு செய்யும் பாலிவுட் பிரபலங்கள்

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனு... மேலும் பார்க்க

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்களே அல்ல" - கொந்தளித்த அமீர் கான்

2007-ம் ஆண்டு அமீர் கான் இயக்கி நடித்த படம் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. இந்த... மேலும் பார்க்க

Aamir Khan: "என் கனவுப் படமான மகாபாரதம்தான் என் கடைசிப் படமா?" - நடிகர் ஆமீர் கான் பதில்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் புதிய படமான 'சிதாரே ஜமீன் பர்' வரும் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.ஆமீர் கான் நேர்காணல் ஒன்றி... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: ``விமானி என் நண்பர்தான்"- 12th Fail பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி உருக்கம்

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் ... மேலும் பார்க்க

Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன் மோதல் ஏன்?

தயாரிப்பாளரும் தொலைக்காட்சி அதிபருமான ஏக்தா கபூர், அனுராக் காஷ்யப் கூறிய "மாமியார் மருமகள் கதைகள்" விமர்சனத்துக்காக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போது பாலிவுட்டில் பெரும் விவாதமாகியிருக்கும் இந... மேலும் பார்க்க