செய்திகள் :

SRK: நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறா? அரசிடம் பணத்தைத் திரும்பக் கேட்கும் ஷாருக்; என்ன நடந்தது?

post image

நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பங்களா இருக்கிறது. இப்பங்களாவின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடியாகும். ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கெளரி கான் பெயரிலுள்ள இப்பங்களா இருக்கும் நிலம் மாநில அரசுக்குச் சொந்தமானது. அந்த நிலத்தை இதற்கு முன்பு அப்பங்களாவை வைத்திருந்தவருக்கு மாநில அரசு குத்தகைக்கு விட்டிருந்தது. அதனை வாங்கியவர் ஷாருக்கான் தம்பதிக்கு விற்பனை செய்தார்.

2446 சதுர மீட்டர் பரப்பு கொண்ட அந்த வீடுடன் கூடிய நிலத்தை ஷாருக்கான் வாங்கிய பிறகு மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. அதன்படி மாநில அரசிடம் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கியவர்கள் குறிப்பிட்ட பணம் செலுத்தி அதனைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

மன்னத் பங்களா
மன்னத் பங்களா

மாநில அரசின் இக்கொள்கையைப் பயன்படுத்தி ஷாருக்கான் தனது வீடு இருந்த நிலத்திற்குப் பணம் செலுத்தி குத்தகையில் இருந்த நிலத்தை சொந்தமாக்கிக்கொள்ள அரசிடம் விண்ணப்பித்தார். அரசு அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து, அதன் மதிப்பில் 25 சதவீதத்தைப் பணமாகச் செலுத்தும்படி ஷாருக்கானிடம் கேட்டுக்கொண்டனர்.

ஷாருக்கானும் 2019 ஆம் ஆண்டு 27.50 கோடி ரூபாய் செலுத்தி அந்த நிலத்தைத் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டார். நிலத்தை மாற்றிய பிறகு அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு செய்திருப்பது தெரிய வந்தது. அதாவது அரசு அதிகாரிகள் நிலத்திற்கு மதிப்பீடு செய்வதற்குப் பதில் பங்களாவிற்கு மதிப்பீடு செய்திருந்தனர்.

இதனை 2022 ஆம் ஆண்டுதான் ஷாருக்கான் கண்டுபிடித்தார். உடனே தான் கூடுதலாகச் செலுத்திய 9 கோடியைத் திரும்ப கொடுக்கும்படி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஷாருக்கான் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இம்மனுவை மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அரசின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி இருக்கிறார். மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பிறகு ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி திரும்ப கொடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Bollywood Threat mail: பாலிவுட் பிரபலங்களுக்கு வரும் கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள்! - போலீஸ் விசாரணை

சமீப காலமாகவே பாலிவுட் பிரபலங்களுக்குத் துப்பாக்கிச்சூடு மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் போன்றவை வந்த வண்ணமிருக்கின்றன.குறிப்பாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராஜஸ்தானில் அபூர்வ வகை மான்களை வேட்டையாடியத... மேலும் பார்க்க

Rashmika: வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்ட ராஷ்மிகா மந்தனா; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமா... மேலும் பார்க்க

Adani: ``பிரபலங்கள் யாரும் இல்லை, எளிமையாகத்தான் நடக்கும்" - மகன் திருமணம் குறித்து கௌதம் அதானி

உலகின் மிக முக்கிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி தனது மகன் திருமணம் எளிமையான முறையில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.பிரபல தொழில் அதிபர் அதானியின் மகன் ஜீத்திற்கும் , குஜராத் வைர வியாபாரியின் ம... மேலும் பார்க்க

Saif Ali Khan: டிஸ்சார்ஜ் ஆன சைஃப் அலிகான்; வீட்டில் குவிந்த ரசிகர்கள்; மருத்துவர்கள் சொல்வதென்ன?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் திருட வந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார். சைஃப் அலிகான் அந்த நபரை... மேலும் பார்க்க

4 வருடங்களில் 168% லாபம்: ரூ.31 கோடிக்கு வாங்கிய வீட்டை, 83 கோடிக்கு விற்பனை செய்த அமிதாப் பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கெனவே அலுவலகம், குடியிருப்பு கட்டடங்களில் முதலீடு செய்து வரும் அமிதாப் பச்சன் மும்பையில் அவற்றை வாட... மேலும் பார்க்க

Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - கரீனா கபூர் வேதனை

மும்பையில் நேற்று (ஜனவரி 16) அதிகாலையில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதிகாலை நேரத்தில் மர்ம நபர் திருட வந்தாரா அல்லது வேறு ஏதாவ... மேலும் பார்க்க