வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தர...
Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்
மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார்.
ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோது, கட்டிடத்தின் மாடியில் இருந்து சூரியன் மறைவதை தனது மொபைல் போனில் போட்டோ எடுக்க விரும்பினார்.
ஜான்வி தனது தந்தையிடம் அனுமதி கேட்டு, மாடியில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் சூரியன் மறைவதை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதுவும் கீழே பெஞ்சில் அமர்ந்திருந்த தனது தந்தை அருகில் மேலிருந்து கீழே விழுந்தார்.
உடனே ஜான்வியை அவரது தந்தை கட்டிடத்தில் வசித்த மற்றவர்களின் துணையோடு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக ஜான்வி உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜான்வி தனது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். அவரது திடீர் மரணம் ஜான்வியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சம்பவம் நடந்த போது மாடியில் ஜான்வி மட்டுமே இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.