தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி இன்று பொறுப்பேற்பு
Tsunami: சீனா, அமெரிக்கா, ஜப்பான், கனடா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை -இந்தியா இடம் பெற்றிருக்கிறதா?
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் இன்று (புதன்கிழமை) காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ரஷ்யா, ஜப்பானை தொடர்ந்து தைவான், பிலிப்பைன்ஸ் பிலிப்பைன்ஸ், சீனா, ஹவாய், குவாம், கலிபோர்னியா, அலாஸ்கா, ஓரிகான், வாஷிங்டன், பிரிட்டிஷ் கொலம்பியா, மெக்சிகோ, பெரு, ஈக்வடார், கனடா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்தியாவிற்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கூறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.