செய்திகள் :

TVK: சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்; நொறுங்கிய கார் - தவெக மாநாட்டு திடலில் திடீர் விபத்து

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே 100 அடியில் கொடிக்கம்பத்தை நிறுவி தவெக கொடியை பறக்கவிட திட்டமிட்டிருந்தனர்.

விக்கிரவாண்டி மாநாட்டிலும் இதே விஷயத்தை செய்திருந்தார்கள். அங்கும் ராட்சத கொடிக்கம்பத்தை நிறுவியிருந்தார்கள்.

கார் சேதம்
கார் சேதம்
கார் சேதம்
கார் சேதம்

மாநாடு ஆரம்பிக்கையில் விஜய் பட்டனை அழுத்தி கொடியை ஏற்றி வைப்பார். அதே திட்டம்தான் இங்கேயும். அதற்காக ராட்சத க்ரேன் மூலம் இன்று காலை முதலே கொடிக்கம்பத்தை நிறுவும் வேலைகளை செய்து வந்தனர்.

மதியம் 2 மணியளவில் பொதுச்செயலாளர் ஆனந்த் வந்து இந்த வேலைகளை முடுக்கிவிட்டார்.

100 அடி கொடிக்கம்பத்தை நிமிர்த்தி நிறுவும் தருவாயில் அந்த கொடிக்கம்பம் அப்படியே சரிந்து விழுந்தது. சுற்றியிருந்த தொண்டர்கள் சுதாரித்து உடனே விலகி ஓடினர்.

அருகிலிருந்த கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததில், அந்தக் கார் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லை.

உடனடியாக தவெக தொண்டர்களும் பவுன்சர்களும் சேர்ந்து கம்பத்தை சரி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றனர்.

மதுரை தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில்  சுமார் 10 லட்சம் தொண்டர்களைத் திரள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்காக 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் பிரதான பாதாகையில் விஜய் உடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.

‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!

அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக பெறுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்து... மேலும் பார்க்க

Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! - விவரம் என்ன?

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

`30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு' -அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்றம்அதன்படி... மேலும் பார்க்க

"முதலமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா" - அமித் ஷாவின் மசோதாவுக்கு CPI (M) கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 130வது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்கும் படியான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேல் பிணையி... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் கடைசி நாளில்.!’ - காவல்நிலையத் தாக்குதல் குறித்து நிலவுமொழி

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர்கள் வளர்மதியும், நிலவுமொழியும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது கடுமையாக... மேலும் பார்க்க