செய்திகள் :

Valentine's Day: ஹார்மோன் சுரந்தா சொல்லியனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்..!

post image

ந்த உலகத்துல இருந்து காதலை எடுத்துட்டா என்னவாகும்? மனிதர்கள், ஆதி மனுஷங்க மாதிரி கூட்டம் கூட்டமா வாழ ஆரம்பிப்பாங்களாம். யாரும் யார்கூட வேணும்னாலும் உறவு வெச்சுப்பாங்களாம். அப்போ, நம்மளையெல்லாம் நாகரிகமாக வாழ வெச்சிருக்கிறது காதல்தான் இல்லியா..? ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் சகிச்சுக்கிட்டு வாழுறதுக்கு உதவுறதும் காதல்ங்கிற ஈர்ப்புதான். 'காதல் மட்டும் இல்லைன்னா, ஆணும் பெண்ணும் அடித்துக்கொண்டே சாவார்கள்'னு எங்கோ படிச்ச ஞாபகம். சரி, காதல்ங்கிற ஈர்ப்பு வர்றதுக்கு ஏதுவா நம்ம உடம்புல ஏதாவது விசேஷமா இருக்கான்னு கேட்டா, ஒண்ணு இல்ல நாலு விஷயங்கள் இருக்குன்னு சொல்றார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

Valentine's Day

''இந்தக் காதல்படுத்துற பாடு இருக்கேன்னு சொல்றதைவிட இந்த 4 ஹார்மோன்கள் படுத்துற பாடு இருக்கேன்னு சொல்றதுதான் நியாயமா இருக்கும். டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின், எண்டார்பின் அப்படிங்கிற இந்த 4 ஹார்மோன்களோட முக்கியமான வேலையே உங்களைக் காதல்ல விழ வைக்கிறதுதான்.

இந்த ஹார்மோனோட பேரே இது எப்படிப்பட்டதுன்னு உங்களுக்குச் சொல்லிடும். போதை மருந்து எடுத்துக்கிறவங்களை 'டோபு அடிக்கிறான்'னு சொல்வாங்க இல்லியா... இந்த ஹார்மோனும் அந்த மாதிரி ஒரு போதையைத்தான் உங்களுக்குக் கொடுக்கும். பார்த்தவுடனே லவ் வர்றது, பிடிச்சவங்களைத் தேடித்தேடி போய் பார்க்கிறது, நாம லவ் பண்றவர் ஆன்லைன்ல இருக்காங்களான்னு எட்டிப்பார்க்கிறதுக்கு எல்லாம் இந்த ஹார்மோன்தான் காரணம்.

Valentine's Day
Valentine's Day

இந்த ஹார்மோனை 'கட்டிப்பிடி ஹார்மோன்'னுதான் சொல்வோம். லவ்வர்ஸ் ஒருத்தரையொருத்தர் தொடுறப்போ, கட்டிப்பிடிக்கிறப்போ இந்த ஹார்மோன் சுரக்கும். பைக்ல போறப்போ நெருக்கமா உட்காரத்தூண்டுறதும் இதுதான். லவ் பிரேக் அப் ஆனா, டிப்ரஷன்ல ஆரம்பிச்சு உயிரை விடுற அளவுக்கு லவ்வர்ஸ் போறதுக்கும் ஆக்ஸிடோசின்தான் காரணம். இந்த ஹார்மோனோட லீலைகள் இன்னும் இருக்கு. லவ்வர்ஸ் ஒருத்தரையொருத்தர் பிரியாம இருக்க வைக்கும்; உங்க காதலனை/காதலியைக் கண்மூடித்தனமா நம்ப வைக்கும்; அந்த நம்பிக்கையில வீட்டை விட்டு ஓடிப்போற அளவுக்குக்கூட பெரிய பெரிய முடிவுகளை எடுக்க வைக்கும். கடைசியா, உங்க காதலன்/காதலிகிட்ட வேற யாராவது கடலைப்போட்டா, பொசசிவ்னெஸ்ல ஆரம்பித்து கோபப்பட்டு சண்டை போடுற வரைக்கும் உங்களை ஏத்தி விடுறதும் இந்த ஹார்மோன்தான்.

உங்களுக்குள்ள நுழைஞ்சுட்ட காதலை அதிகப்படுத்துறதும், அதை அப்படியே தொடர வைக்கிறதும் இந்த ஹார்மோனோட முக்கியமான வேலை.

Valentine's Day

'எண்டோஜெனஸ் மார்பினோ'ட சுருக்கம்தான் எண்டார்பின். மார்பின்ங்கிறது ஒரு போதை மருந்து. அதோட வேலையை இந்த ஹார்மோன் நம்ம உடம்புல பார்க்கும். லவ்வரை பார்த்த நொடியில குபுக்குன்னு ஒரு சந்தோஷம் குமிழ் விடுது இல்லியா... அந்த வேலை எண்டார்பின் பார்க்கிறதுதான். மனசுக்குள்ள காதலை வெச்சிக்கிட்டு வெளியில 'நான் காதலிக்கலையே'ன்னு சொல்றவங்களைக் கையும் களவுமா மாட்டிவிடுற பார்க்கிறது இதுதான். காதலி சொல்லிட்டான்னு சில ஆண்கள் தம்மு, தண்ணி மாதிரி கெட்டப்பழக்கங்களை விடுவாங்க இல்லியா... ஆண்களை அப்படி நல்ல பசங்களா மாத்துறதும் இதுதான். நாலு மணி நேரம் பீச்சுல உட்கார்ந்து பேசியிருப்பாங்க. வீட்டுக்கு வந்த பிறகு போன்ல பேச ஆரம்பிப்பாங்க. இப்படி சலிப்பே இல்லாம பேச வைக்கிறதும் எண்டார்பின்தான். செக்ஸோட உச்சக்கட்டத்துல சுரக்கிறதும் இந்த ஹார்மோன்தான்.

லவ் பண்றப்போ வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரி இருக்கிறதுக்கும் இந்த நாலு லவ்வபிள் ஹார்மோன்கள்தான் காரணம். 'இந்த நாலு ஹார்மோனுக்கும் எங்களை லவ் பண்ண வைக்கிறதை தவிர வேலையே கிடையாதா டாக்டர்'னு கேட்டீங்கன்னா, அதெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு. ஆனா, காதலர் தினம் நெருங்கிட்டிருக்கிறப்போ ஆணையும் பெண்ணையும் இணைச்சு உலகத்தை இயங்க வெச்சிட்டிருக்கிற விஷயங்களைப் பத்தி பேசினா தானே பொருத்தமா இருக்கும்.''

ஹேப்பி ஹார்மோன்ஸ்... ஹேப்பி வேலன்டைன்ஸ் டே..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Valentine's Day: "எனக்கு முன்னாடி என் பொண்டாட்டிப் போயிடணும்..." - ஓர் அப்பாவின் காதல் கதை!

அப்பாக்கள் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சாலும், அதை வளர்ந்த பிள்ளைங்ககிட்ட சொல்லவே மாட்டாங்க. எல்லாம் ஒரு பயம்தான். அதை மீறி யாராவது ஒரு அப்பா தன்னோட காதல் கதையை உள்ளது உள்ளபடி சொன்னா எப்படியிருக்கும்? அப... மேலும் பார்க்க

Valentine's Day: 'Nanoship, Situationship, Benching...' - Gen Z தலைமுறையின் காதல் மொழி தெரியுமா?

காதல் உலகப் பொது மொழி. முதல் உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் இன்றுவரை History always Repeats. அதே காதல், அதே வசீகரம்.இன்றைய அதிவேகமாக மாறிவரும் உலகில் நேற்றைய காதலர்களால் இன்றைய காதலர்களின் மொழியைப் பு... மேலும் பார்க்க

Valentine's Day: காதல் தரும் பிரிவால் நன்மை உண்டாகுமா? - நிபுணர்கள் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்!

"காதல்" அனைவருக்குமானது. இந்த காதலில் விழாதவர் அல்லது இதனை வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்காதவர் இருக்க முடியாது.காதலை எவ்வளவு தூரம் உணர்கிறார்களோ, அவ்வளவு தூரம் பிரிவின் வலியையும் உணர்கிறார்கள். காதல்... மேலும் பார்க்க

Relationship: மனைவியை கை ஓங்கும் கணவனைத் திருத்தும் 6 வழிகள்!

பெண் தன்னை கை ஓங்குவதை வாழ்நாள் அவமானமாக நினைக்கிற ஆண், தன் மனைவி என்ற ஒரே உரிமையை வைத்துக்கொண்டு பெண்ணை அடிக்கிறான். ’இந்த நூற்றாண்டுல இருந்துதான் ஆரம்பிச்சது’ என்று உறுதியாகக் கணிக்க முடியாத அநாகரிக... மேலும் பார்க்க

Bill Gates: விவாகரத்துக்கு பின் காதலி குறித்து மனம் திறந்த பில் கேட்ஸ் - யார் இந்த பவுலா ஹார்ட்?

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பவுலா ஹர்டுடனான தனது உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்துகொண்டனர். இ... மேலும் பார்க்க