செய்திகள் :

Virat Kohli : 'நான் இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன்!' - ஆதங்கப்படும் ஸ்ரீகாந்த்

post image

'ஓய்வு பெற்ற கோலி!'

இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு கட்டாயம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.

Virat Kohli
Virat Kohli

'நான் இருந்திருந்தால் விட்டிருக்கமாட்டேன்!'

அவர் பேசியதாவது, ''நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த போதுதான், 2010-11 காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒரு தொடரில் கோலி டெஸ்ட்டில் அறிமுகமானார். அங்கே இருந்து ஆரம்பித்த கோலி இப்போது தனது பயணத்தை முடித்திருக்கிறார்.

நான் இந்த சமயத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்திருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன். கில்லை டெஸ்ட் கேப்டன் என பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கில்லே இன்னமும் தன்னை டெஸ்ட்டில் நிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் இல்லையேல் பும்ராவை கேப்டன் என்கிறார்கள். அவரால் காயமடையாமல் 5 போட்டிகளுக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கமுடியுமா எனத் தெரியவில்லை.

Virat Kohli
Virat Kohli

இந்த மாதிரியான சூழலில் விராட்டை அழைத்து கேப்டன் பதவியை கொடுத்திருப்பேன். `ஒன்றிரண்டு ஆண்டுகள் இந்திய அணியை நன்றாக செட் செய்து கொடுத்துவிட்டு ஓய்வு பெறு' எனக்கூறியிருப்பேன். டெஸ்ட்டில் விராட்தான் உலகின் தலைசிறந்த கேப்டன். வெளிநாடுகளில் எவ்வளவு போட்டிகளை வென்றிருக்கிறார் என எடுத்துப்பாருங்கள்.' என்றார்.

DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' - டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்

'குஜராத் வெற்றி!'டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின்... மேலும் பார்க்க

KL Rahul : 'திணறிய டெல்லி; க்ளாஸாக ஆடி சதமடித்த கே.எல்.ராகுல்!

'ராகுல் சதம்!'டெல்லிக்கு கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. அதுவும் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக. ப்ளே ஆப்ஸ் ரேஸில் நீடிக்க வெற்றி தேவையான முக்கி... மேலும் பார்க்க

RR vs PBKS : 'உங்கிட்ட எண்டிங் சரியில்லையேப்பா..' - ராஜஸ்தானை எப்படி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்?

'ராஜஸ்தான் vs பஞ்சாப்!'மீண்டும் ஐ.பி.எல் தொடங்கிய பிறகு முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருந்த பஞ்சாபும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்தானும் மோதியிருந்தன.Rajasthan ... மேலும் பார்க்க

IPL Playoffs : 'ஒரே நாளில் 3 அணிகள் ப்ளே ஆப்ஸ் செல்ல வாய்ப்பு' - எப்படி தெரியுமா?

'பரபர ப்ளே ஆப்ஸ் ரேஸ்!'ஐ.பி.எல் தொடர் க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது. இன்னும் 12 லீக் போட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், இன்னமும் ப்ளே ஆப்ஸூக்கு ஒரு அணி கூட தகுதிபெறவில்லை. இன்று இரண்டு போட்டிகள் நடைபெ... மேலும் பார்க்க

``தோனி டெஸ்ட்ல ரிட்டையர் ஆகிட்டு இன்னும் ஐ.பி.எல் ஆடுறாரு, ஆனா கோலி..'' - சஞ்சய் மஞ்சரேக்கர்!

'கோலி பற்றி சஞ்சய் மஞ்சரேக்கர்!'பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வி... மேலும் பார்க்க

``விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்!'' - சின்னசாமியில் நெகிழ்ந்த ஹர்ஷா போக்லே!

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்ட... மேலும் பார்க்க