மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால்
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் செயல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் யுவேந்திர சகல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமீபத்தில் யுவேந்திர சஹாலும் அவரின் மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கிரிக்கெட் வீரர் சஹால் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனஸ்ரீ வர்மாவை அன்ஃபாலோவும் செய்திருக்கிறார். அவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் சஹாலின் இந்த செயல் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...