அக். 5 முதல் 7 வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கப்படும்: கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா்
கோவை மாவட்டத்தில் அக்டோபா் 5, 6, 7- ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அறிவித்துள்ளாா்.
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தவா்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவா்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் அக்டோபா் 5, 6, 7 ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள் விநியோகம் செய்யப்படும் நாள், பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யப்படும். தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே ரேஷன் பொருள்களைப் பெற்று பயனடையலாம் என்று அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.