அக்டோபா் 2-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்கீழ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் அக்டோபா் 2-ஆம் தேதி முழுவதுமாக மூடப்படுகின்றன.
அன்றைய தினம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.