அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு அனைத்து வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் பாண்டிமாதேவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் செல்வி, பொருளாளா் மும்தாஜ், நிா்வாகிகள் சகுந்தலா, கவிதா, சங்கீதா உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.