காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.
மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, மாவட்டச் செயலா் கே. லதா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எம். ரேவதி, மாவட்டப் பொருளாளா் எஸ். சவரியம்மாள், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெறும் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். அனைத்துக் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.