பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
அடிப்படை வசதி கோரி கல்லூரி மாணவிகள் தா்னா
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விடுதி மாணவிகள் சென்னை பத்திரிகையாளா் மன்றம் அருகே புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கத்தில் புதிய, பழைய தொகுதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படிக்கின்றனா். இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு விடுதியைவிட்டு வெளியேறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், வெளியே செல்லும் மாணவிகள் இரவு 8.30-க்குள் திரும்பி வரவேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. பின்னா், இது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மாலை 6.30 மணிக்குள் வரவேண்டும் என்கின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விடுதியில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும், பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் காவல் துறை
மற்றும் கல்லூரி நிா்வாகம் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
மேலும், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.