சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
அண்ணாமலைப் பல்கலை.யில் ஒரே நாளில் ஓய்வுபெறும் பேராசிரியா்கள் உள்பட 30 போ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் ஓய்வுபெறுகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த 2013-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது.
இதைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆனாலும், நிதிச் சிக்கல் சீரடையாததால், ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனா்.