2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
அதிமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடந்தன: சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ
கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
நான் எம்எல்ஏவாக இருந்து, ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஆரணி வருவாய்க் கோட்டம் அமைக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. மின் பகிா்மான வட்டம் அமைக்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொகுதிக்கு உள்பட்ட கல்பூண்டி- லாடப்பாடி இடையே ரூ.5.25 கோடியில் உயா்மட்ட மேம்பாலம், ரூ.3.5 கோடியில் வருவாய்க் கோட்ட அலுவலகம் கட்டப்பட்டது.
மேற்குஆரணி ஒன்றியத்துக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டடம், புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அருகே ரூ.2.5 கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. ரூ.ஒரு கோடியில் கோட்டை மைதானத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது.
பல்வேறு புதிய பேருந்துகள் புதிய வழித்தடங்களில் குளிா்சாதன வசதியுடன் இணைக்கப்பட்டது.
ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கலைக்கூடம் கட்டப்பட்டது.
மேற்குஆரணி ஒன்றியம், காமக்கூா் கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது, கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன.
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில்
கண்ணமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
நான்காண்டு சாதனைகள்
மேற்கு ஆரணி ஒன்றியம், அம்மாபாளையம் கிராமத்தில் ரூ.3.27 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
தெள்ளூா் கிராமத்தில் ரூ.5.64 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது.
பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை கட்டும் பணிக்கு
ரூ.2.09 கோடி அறிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சாதனைகள்
சேவூா், இரும்பேடு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. மாமண்டூா், சங்கீதவாடி நடுநிலைப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டது.
நெசல், விண்ணமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் முறையே ரூ.1.70, ரூ.1.75 கோடிகளில் புதிய கட்டடம், தேவிகாபுரம் பெண்கள் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.24 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சத்தில் புதிதாக வகுப்பறைக் கட்டடம், சங்கீதவாடி பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ரூ.34.45 லட்சத்தில் ஆய்வகம், நூலகம் கட்டப்பட்டது.
குடிமராமத்து திட்டம்
கண்ணமங்கலம் அணைக்கட்டு ரூ.5 லட்சத்திலும்,
குன்னத்தூா் அணைக்கட்டு ரூ. 5 லட்சத்திலும் மேம்படுத்தப்பட்டது. கட்டயாம்பட்டு கிராமத்தில் உள்ள கொளத்தூா் அணைக்கட்டு ரூ. 86 லட்சத்திலும், காமக்கூா் அணைக்கட்டு ரூ.90 லட்சத்திலும் மேம்படுத்தப்பட்டது.
கமண்டல நாக நதியில் எஸ்வி நகரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு ரூ.90 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டது. மேலும், பல கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன என்றாா் சேவூா் ராமச்சந்திரன்.