செய்திகள் :

அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்

post image

பேரவைத் தலைவருக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஏன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிக நேரம் பேச அனுமதிப்பதில்லை, தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்தில்லை, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பேரவைத் தலைவரே பதிலளிக்கிறார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை வைத்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் இன்று கொண்டுவந்தார்.

இந்த தீர்மானம் விவாதத்துக்கு வந்த நிலையில், பேரவையைவிட்டு அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவைக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக, பாமக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளவில்லை.

விவாதத்தின் இறுதியில் பேசிய முதல்வர், ”என் தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாமல் நடுநிலையோடு பேரவை வழிநடத்தி வருபவர் அப்பாவு” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று டிவிஷன் முறையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும், தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி அறிவித்தார்.

இதையும் படிக்க | 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!

தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவானது. இதையடுத்து, மீண்டும் பேரவைக்கு வந்த அப்பாவு, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

இதனிடையே, அதிமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, குறுக்கிட்டு அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இதேபோல அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், அதிமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக பேரவைத் தலைவருக்கு எதிரான அதிமுகவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | வெந்நீர் குடித்தால் தொப்பை குறையுமா?

கடத்தல் லாரி உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு?: அண்ணாமலை

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு? என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலை... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் 3 மணிநேரமாக போலீஸாா் அதிரடி சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனா்.மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) உயிரிழந... மேலும் பார்க்க

2-வது மொழியே கற்பிக்காத நிலையில் 3-வது மொழி வேறு: ப. சிதம்பரம் விமர்சனம்

பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தையே கற்பிக்க முயலாத நிலையில், இதில் மூன்றாவது மொழி வேறு என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அம... மேலும் பார்க்க

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்(64) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1... மேலும் பார்க்க

தங்கத்தேர்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்த... மேலும் பார்க்க