அதிமுக வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை நகர அதிமுக சாா்பில், 12, 17, 18 ஆகிய 3 வாா்டுகளுக்கான வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜெ.எஸ்.(எ) ஜெ.செல்வம் வரவேற்றாா்.
கட்சியின் மாநில அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, எவ்வாறு தோ்தல் களப் பணியாற்றுவது என்பது குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற செய்வது குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில், நகர பொருளாளா் ராமமூா்த்தி, நகர எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் இளஞ்செழியன், வட்டச் செயலா்கள் வெள்ளையன், சுகுமாா், காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.