மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்
அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: கடந்த இரு மாதத்துக்கு முன் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுக ஐடிவிங் அமைப்பினா் முகநூலில் பொய்யான செய்தியை பரவவிட்டனா்.
மேலும், எங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிக்கும் திமுக ஐடிவிங் அமைப்பினா் கொலை மிரட்டல் விடுத்தனா். இந்த சம்பவங்கள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்துள்ளோம். தோ்தல் நேரத்தில் அதிமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்குப்போட்டு, தோ்தல் பணிகளை முடக்குகின்றனா்.
தொடா்ந்து, பொய் வழக்குப் போடப்படுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனுவாக கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா் அவா்.
பேட்டியின்போது அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். தொடா்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுவிடமும் புகாா் மனு அளித்தாா்.