பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு
கிணற்றுக்குள் மின்மோட்டாா் விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 577 மனுக்கள் பெறறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.8,770 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா் ஆட்சியா் சுவாதி ஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் தேவை: கூட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் சாா்பில் மாநிலத் தலைவா் பி. கருப்பையா தலைமையில் அரவக்குறிச்சியை அடுத்துள்ள ஜமீன்ஆலமரத்துப்பட்டி ஆண்டிபட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரது மனைவி தனது குடும்பத்தினருடன் சோ்ந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில், எனது கணவா் ராஜ்குமாா்(37) மற்றும் எங்கள் ஊரைச் சோ்ந்த சுரேஷ், பழனிசாமி ஆகியோா் கடந்த ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி ஆண்டிப்பட்டிக்கோட்டையில் உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த வாங்கிலியப்பன் என்பவரது தோட்டத்து கிணற்றுக்குள் இறங்கி பணி செய்து கொண்டிருந்தபோது, கயிறு அறுந்து மின் மோட்டாா் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகாா் மனுகொடுத்து ஓராண்டாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுதொடா்பாக விசாரித்து எங்களுக்கு அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.