எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தளவாபாளையத்தில் தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகள் சரோஜினி. இவா் கரூா் மாவட்டம் தளவாபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி பிடெக் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவி சனிக்கிழமை இரவு திடீரென விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சடலத்தை வாங்க ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த மாணவியின் பெற்றோா், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனா்.
தொடா்ந்து மாணவியின் பெற்றோரிடம் போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களிடம் மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட சடலத்தை ஒப்படைத்தனா். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.